First Woman US Nuclear Ship | அமெரிக்க அணு ஆயுத கப்பலுக்கு நியமிக்கப்பட்டார் முதல் பெண் கேப்டன்..
யு.எஸ்.எஸ். ஆபிரஹாம் லிங்கன் என்ற அணு ஆயுத கப்பலுக்கு ஏமி பார்ன் ஷிமிட் என்ற பெண் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் என்றாலே வீட்டுக்குள்தான் இருக்க வேண்டுமென்ற காலத்தை மாற்றி இன்று பெண்கள் விண்வெளிவரை சென்றுவருகின்றனர். அந்தவகையில் அமெரிக்க அணு ஆயுத கப்பலான யு.எஸ்.எஸ். ஆபிரஹாம் லிங்கனுக்கு பெண் கேப்டன் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் அமெரிக்க கடற்படையில் செவிலியர் பணிக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டனர், இரண்டாம் உலகப்போரின்போது ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவது அதிகரித்தது.
அதேபோல் கடற்படைக்கு சொந்தமான விமானங்களை 1974ஆம் ஆண்டு முதலும், போர்க் கப்பல்களை 1994ஆம் ஆண்டு முதலும் பெண்கள் இயக்குகின்றனர். ஆனால், அணு ஆயத கப்பலுக்கு மட்டும் பெண்கள் இதுவரை தலைமைப் பதவியை அலங்கரித்தது இல்லை.
#Congratulations to #Capt #AmyBauernschmidt; #First #Woman Lead a #NuclearCarrier in @USNavy Historyhttps://t.co/WJrKu17a6e pic.twitter.com/2PlQl2yDm1
— Troy Welch (@TroyWel59) January 4, 2022
இந்நிலையில் யு.எஸ்.எஸ். ஆபிரஹாம் லிங்கன் என்ற அணு ஆயுத கப்பலுக்கு ஏமி பார்ன் ஷிமிட் என்ற பெண் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே இந்தக் கப்பலின் செயல் அதிகாரியாக 2016ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏமிக்கு பலர் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்தையும் கூறிவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க:Viral News: 28 நாட்கள் கோமாவில் இருந்த செவிலியர்.. ’வயகரா’ மருந்தால் உயிர் பிழைத்த ஆச்சரியம்.. என்ன நடந்தது?
நிர்வாண உடல்.. வித்தியாசமான மொட்டை தலை.! கேமராவில் சிக்கிய மர்ம உருவம்.. ஏலியனா என தொடரும் ஆய்வு!
அமெரிக்காவில் 15 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள்.. வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த அபூர்வ நிகழ்வு!