நிர்வாண உடல்.. வித்தியாசமான மொட்டை தலை.! கேமராவில் சிக்கிய மர்ம உருவம்.. ஏலியனா என தொடரும் ஆய்வு!
அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் என்ற நபர் வேட்டைக்காக நான் வைத்த கேமராவில் ஏலியன் உருவம் ஒன்று பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சத்தில் பூமி என்பது ஒரு சிறிய கோள் மட்டுமே. அந்த சிறிய கோளில் 6 அறிவு கொண்ட உயிரினமாக நாம் வாழ்ந்து வருகிறோம். சூரியக் குடும்பத்தைப் போல எத்தனையோ குடும்பங்கள் பிரஞ்சத்தில் உள்ளன. அப்படியானால் பூமியைப் போல கணக்கில்லாத கோள்களும் இங்குண்டு. அதனால் தான் நம்மைப் போல இன்னொரு கூட்டமும் எங்கேனும் வாழ வாய்ப்புள்ளதா என ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் உள்ளனர். நம்மை பொறுத்தவரை அவர்கள் வேற்றுக்கிரக வாசிகள். யாரும் இருக்கலாம், எங்கேனும் இருக்கலாம் என்ற ஒரு வித எதிர்பார்ப்புடனே வேற்று கிரகவாசிகளின் தேடுதல் வேட்டை தொடர்கிறது. அதேபோல் பூமிக்கும் அவ்வப்போது வேற்றுக்கிரக வாசிகள் வந்துபோவதாக சில செய்திகள் அடிபடுவதும் உண்டு.
100% உறுதிப்படுத்தப்பட முடியவில்லை என்றாலும் அவற்றை முழுமையாக மறுக்காமல் தொடர்ந்து ஆய்விலேயே ஈடுபடுகின்றனர் ஆய்வாளர்கள். அப்படியான ஒரு வேற்றுக்கிரக வாசியின் புகைப்படம் அமெரிக்காவின் மொண்ட்டானா பகுதியில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் என்ற நபர் வேட்டைக்காக நான் வைத்த கேமராவில் ஏலியன் உருவம் ஒன்று பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அந்த நபர், என் கேமராவில் பதிவான உருவம் ஒரு மனிதராக இருக்கலாம் என்று தொடக்கத்தில் நினைத்தேன். ஆனால் அதன் உருவம் என்னை சந்தேகமடையச் செய்தது. ட்ரான்ஸ்பரண்டாகவும் நிர்வாண உடலாகவும் அது இருந்ததை நான் உணர்ந்தேன். அதன் தலை சற்று வித்தியாசமாக குமிழி போலவும் இருந்தது. எங்கள் பகுதியில் தொடர்ந்து சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. சாலையில் செல்லும் கார்கள் திடீரென நின்றுவிடும். இப்படியான சம்பவங்கள் சில சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
அப்பகுதியில் நடக்கும் தொடர் மர்மங்களை அங்குள்ள பாட்ரிக் என்பவர் ஆவணப்படமாக எடுத்து வருகிறார். ஏலியன் புகைப்படம் குறித்து பேசிய அவர், இது மர்மமான நிகழ்வுகளின் தொடராக உள்ளது. மக்கள் நினைப்பதை விடவும் அதிகமான விஷயங்கள் உள்ளன என்றார்.
ஏலியன் தொடர்பான புகைப்படங்களும் தகவல்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. மறுபுறம் ஏலியன் தொடர்பான ஆய்வை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது நாசா. ஏலியன் குறித்து தெரிவித்துள்ள நாசா, ஏலியன் ஏற்கெனவே பூமிக்கு வந்தும் இருக்கலாம். இன்னும் 100% உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அதனால் ஆய்வுகள் தொடரத்தான் செய்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்