Twitter : இனி ட்விட்டரில் பெரிய ரைட்டப் எழுதலாம்?...விரைவில் அறிமுகம் என எலான் மஸ்க் அறிவிப்பு...!
ட்விட்டரில் டைப் லிமிடேசன் 10,000 வரை நீடிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
Twitter : ட்விட்டரில் டைப் லிமிடேசன் 10,000 வரை நீடிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
ட்விட்டரில் ஒரு போஸ்ட் செய்ய வேண்டும் என்றால் இதற்கு முன்பு பயனாளர்களுக்கு ஒரே மாதிரியாக லிமிடேசன் இருக்கும். அதாவது 280 எழுத்துக்கள் வரை டைப் செய்து ட்வீட் செய்து கொள்ளலாம். ஆனால் எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அது மாற்றப்பட்டு சாதாரண பயனாளர்கள் மற்றும் ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனாளர்கள் என இருவருக்கு தனித்தனியே குறிப்பிட்ட அளவிலான லிமிடேசன் மட்டுமே தற்போது வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சாதாரண ட்விட்டர் பயனாளர்களுக்கு 280 எழுத்துக்கள் வரையும், ப்ளூ டிக் பயனாளர்களுக்கு 4,000 எழுத்துகள் வரையிலும் என அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது டைப் லிமிடேசனை எலான் மஸ்க் 10,000 வரை நீடிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். இதற்கு முன்னதாக அனுமதிக்கப்பட்டு வந்த குறைந்த எண்ணிக்கையிலான எழுத்து லிமிடேசன்ஸை மாற்றி இனி 10,000 வரை எழுத்துகள் கொண்ட ட்வீட்களை பதிவிட அனுமதி விரைவில் வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
வரவிருக்கும் இந்த அம்சமானது ட்விட்டரின் ப்ளூ பயனர்களுக்கு மட்டும் வரையறுக்கப்படுமா அல்லது அனைத்து பயனர்களுக்கும் வருமா என்பது குறித்து எந்த தகவலும் தற்போது இல்லை. மேலும் இந்த புதிய அம்சத்திற்கு பணம் செலுத்தும் படி இருக்குமா என்ற தகவலும் வெளியாகவில்லை.
எலான் மஸ்க்
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி தினம் ஒரு பிரச்னை, குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது.
ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்று பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்களும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், செலவு குறைப்பு நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள 2 ட்விட்டர் அலுவலகங்களை மூடியதோடு வீட்டில் இருந்து வேலை செய்யமாறு உத்தரவிட்டார்.
இது ஒரு பக்கம், வெரிஃபைடு டிக் வாங்க மாதாமாதம் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து பல விவாதங்களை கிளப்பினார் எலான் மஸ்க். அதைதொடர்ந்து, நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக் என, மூன்று விதமான டிக்குகளுடன் அமல்படுத்தினார். இதனை அடுத்து லெட்டர்ஸ் லிமிடேசனும் இருந்தது. தற்போது அந்த வரம்புதான் 10,000 வரை நீடிக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்தார்.
மேலும் படிக்க