தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்.. உலகின் மிகவும் வெப்பமான டாப் 5 இடங்களின் பட்டியல் இதோ...
உலகம் முழுவதும் சுமார் 50 டிகிரி செல்சீயஸ் வெப்பத்தைக் கடந்த டாப் 5 இடங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.. இவற்றில் சில பகுதிகள் 70 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவையும் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா முழுவதும் இந்த ஆண்டு கோடிக்கணக்கான மக்கள் கோடை வெப்பத்தால் தவித்து வருகின்றனர். இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு வெப்ப அலை இருக்கும் என எச்சரிக்கை விடுத்து வருகிறது. கடந்த மே மாதம், இதுவரை காணாத அளவிலான வெப்பத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகள் கண்டன.
கடுமையான வானிலை சூழல் காரணமாக மக்கள் நோய்களால் பாதிக்கப்படுவதும், வெப்ப அலையின் சீற்றம் காரணமாக உயிரிழப்பதும் செய்திகளின் இடம்பெறுகின்றன. உலகின் பிற பகுதிகளில் இதுபோன்ற வெப்பம் மிகுந்த பகுதிகள் குறித்தும் நாம் தற்போது சிந்திக்க வேண்டும்.
உலகம் முழுவதும் தட்பவெப்பச் சூழல் அதிகமாக இருக்கும் பல்வேறு பகுதிகள் இருக்கின்றன. சுமார் 50 டிகிரி செல்சீயஸ் வெப்பத்தைக் கடந்த டாப் 5 இடங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.. இவற்றில் சில பகுதிகள் 70 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவையும் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பந்தர் ஏ மஹ்ஷஹ்ர், ஈரான் - 74 டிகிரி செல்சியஸ்
ஈரானின் குசெஸ்தான் மாகான்ணத்தின் மஹ்ஷஹ்ர் பகுதியின் தலைநகர் பந்தர் ஏ மஹ்ஷஹ்ர் நகரமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் போது, பந்தர் ஏ மஹ்ஷஹ்ர் பகுதியில் சுமார் 74 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மேலும், அப்போதைய சூழலில் மத்திய கிழக்குப் பகுதியில் நீடித்த அந்த வெப்பம் வரலாற்றிலேயே இரண்டாவது முறை அதிக அளவைத் தொட்டதாகக் கருதப்பட்டது.
டாஷ்டே லூட், ஈரான் - 70.7 டிகிரி செல்சியஸ்
பல ஆண்டுகளாக உலகின் வெப்பமான பகுதிகளில் தொடர்ந்து டாப் 5 இடங்களுக்குள் இடம்பெறும் இந்தப் பகுதி ஈரானின் கிழக்குப் பகுதியில் இருக்கும் பாலைவனமாகும். சுமார் 5400 சதுர கிலோமீட்டர் தொலைவுள்ள இந்தப் பகுதியில் தாவரங்களோ, விலங்குகளோ இல்லை. கடந்த 2005ஆம் ஆண்டு, இங்கு அதிகபட்சமாக 70.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இப்பகுதியின் வெப்பம் காரணமாக எந்த விலங்கும் இங்கு வாழ்வது இல்லை.
குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா - 69.3 டிகிரி செல்சியஸ்
ஆஸ்திரேலியாவின் விடுமுறை சுற்றுலா தளமாகக் கருதப்படும் பகுதி குயின்ஸ்லாந்து. இங்குள்ள கடற்கரைகள், கடற்கரை தீவுகள், சர்ஃப் விளையாட்டுகள், உலகப் பாரம்பரியப் பகுதிகளாகக் கருதப்படும் மழைக்காடுகள், நதிகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவை இதனை சுற்றுலா தளமாக மாற்றுகின்றன. எனினும், கடந்த 2003ஆம் ஆண்டு, குயின்ஸ்லாந்து பகுதியின் வெப்பம் சுமார் 69.3 டிகிரி செல்சியஸ் எனப் பதிவானது.
ஃப்ளேமிங் மலைகள், ஷிஞ்சியாங், சீனா - 66.8 டிகிரி செல்சியஸ்
ஹுவோயன் மலைகள் என்றழைக்கப்படும் ஃப்ளேமிங் மலைகள் சிவப்பு கற்களால் ஆன மலைகள் ஆகும். அவை சீனாவின் ஷிஞ்சியாங் மாகாணத்தின் டியான் ஷான் பகுதியில் அமைந்துள்ளன. மேலும், டாக்லாமகான் பாலைவனத்தின் வடக்கு எல்லைப் பகுதியிலும், டுர்பான் நகரத்தின் கிழக்கிலும் இவை அமைந்துள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு, இப்பகுதியின் வெப்பம் சுமார் 66.8 டிகிரி செல்சியஸ் எனக் கணக்கிடப்பட்டது. அந்த ஆண்டில் உலகிலேயே அதிக வெப்பம் கொண்ட இடமாக அப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.