மேலும் அறிய

Solar Eclipse: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம்.. 178 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம் என்ன?

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்தியாவில் இரவு நேரம் சூரிய கிரகணம் தோன்றும் என்பதால் இதனை மக்கள் காண இயலாது.

இந்த ஆண்டு நிகழக்கூடிய இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி அதாவது இன்று நிகழ்கிறது.

சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும்  ஒரே நேர்க்கோட்டில் வருவது தான், அதாவது நிலவு பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும்.

பூமியானது சூரியனைச் சுற்றிவரும் பாதையை உள்ளடக்கிய தளம் எக்லிப்டிக் தளம் என்றழைக்கப்படுகிறது. நிலவு பூமியை மற்றொரு சிறிய நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. ஆனால் பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தில் நிலவு பூமியைச் சுற்றுவதில்லை (சுமார் 5 டிகிரி சாய்கோணத்தில் சுற்றிவரும்). எனவே ஒவ்வொரு சுற்றின் போதும் நிலவு எக்லிப்டிக் தளத்தை இருமுறை சந்திக்கும் சில நேரங்களில் பூமியையும் சூரியனையும் இணைக்கும் நேர்க்கோட்டில் நிலவு எக்லிப்டிக் தளத்தைக் கடக்கும்போது மட்டும் சூரிய கிரகணம் நிகழ்கிறது.

 சூரிய கிரகணம் எங்கு எல்லாம் காண முடியும்?

இந்த கிரக நிகழ்வானது சர்வதேச நேரப்படி அக்டோபர் 14 ஆம் தேதி பிற்பகல் 3.03.50 மணிக்கு தொடங்கி இரவு 8.55.16 மணிக்கு நிறைவடைகிறது.  இந்திய நேரப்படி, இன்று இரவு 8:34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு  02:25  மணிக்கு முடிவடைகிறது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடப்பதால் இந்தியாவில் காண இயலாது. இந்த நெருப்பு வளைய சூரியகிரகண நிகழ்வானது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் பல நாடுகளிலும், பசுபிக் கடல் பகுதிகளில் தெளிவாக காண முடியும்.

அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் ஆரிஜோன் முதல் டெக்சாஸ் வரை நன்றாக தெரியும். இந்த கிரகண நிகழ்வின் போது மெக்ஸிகோ, பெனிசுலா, பிரேசிலின் சில பகுதிகள், குவாத்தமாலா, ஹோண்டரஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா, கொலம்பியா மற்றும் பிரேசில். அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் - அலாஸ்காவிலிருந்து அர்ஜெண்டினா வரை பகுதி கிரகணம் தெரியும்.  மேலும் நாசா மூலம் இந்த சூரிய கிரகணம் ஒளிப்பரப்பு செய்வதால் மக்கள் இதனை நாசா இணையத் தளத்தில் காணலாம்.

இன்று பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் மிகவும் சிறப்பு. மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசைக்கு திதி கொடுக்காவிட்டாலும் இன்று திதி கொடுத்தால் போதுமானது. இன்று சூரிய கிரகணம் தோன்றுவது சிறப்பாகும். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இதுவே ஆகும். மேலும் 178 ஆண்டுகளுக்கு பின் மகாளய அமாவாசையில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்பது கூடுதல் சிறப்பாகும்.  இந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் அரிய வகையான ஹைபிரிட் சூரிய கிரகணம் வானில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

TN Special Buses: ஆயுத பூஜைக்கு ஊருக்கு போறீங்களா? தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதுதான்..பாருங்க!

Today Rasipalan, October 14: தனுசுக்கு சிக்கல்...மகரத்துக்கு நிதானம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 15,606 கன அடியில் இருந்து 15,260 கன அடியாக குறைவு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget