TN Special Buses: ஆயுத பூஜைக்கு ஊருக்கு போறீங்களா? தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதுதான்..பாருங்க!
சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TN Special Buses: சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளும் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, தசரா பண்டிகை அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையில், ஆயுத பூஜை அக்டோபர் 23ஆம் தேதியும், சரஸ்வதி பூஜை அக்டோபர் 26ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் வேலை பார்த்து கொண்டு இருப்பவர்கள், இந்த நாளில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதன்படி, தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் முதல் சிறப்பு பேருந்துகள்:
இதுகுறித்து போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டிணத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் 15/10/2023 முதல் 25/10/2023 குலசேகரப்பட்டிணத்திற்கும் மற்றும் குலசேகரப்பட்டிணத்திற்கும் தினசரி வரை சென்னையிலிருந்து திருச்செந்தூர், கோயம்புத்தூரிலிருந்து இயக்க கூடிய பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருச்செந்தூர், பேருந்துகளுடன் கூடுதல் மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக 24/10/2023 மற்றும் 25/10/2023 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு, இல்லாமல் ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து மூன்று பேருந்து நிலையங்களில் பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், பூவிருந்தமல்லி மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் அக்டோபர் 20,21, 22 ஆகிய மூன்று தினங்களில் சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து திரும்பவும் செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Vachathi Case: வாச்சாத்தி விவகாரத்தில் திருப்பம்... உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடும் குற்றவாளிகள்!