ஆப்கன் பெண்கள் கல்வி பயில வெளிநாடுகளுக்குச் செல்ல தடை: அறிவித்த தலிபான் அரசு.. அதிர்ந்த மக்கள்..
Afgan: ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிப்புகாக வெளிநாடுகளுக்க செல்ல தலிபான் தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்கு செல்ல தலிபான் அரசு தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபுலில் இருந்து மேற்படிப்புக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளுக்கு சென்று படிப்பதற்கு ஆப்கானில் உள்ள பெண்களுக்கு அனுதிக்க அளிக்கப்படாது என்பதே தலிபானின் முடிவு என்று ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2018- ஆம் ஆண்டு 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்களின் படை பலத்தினால், அமெரிக்க தங்களது படைகளையும், பணத்தையும் மேலும் இழக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, பிப்ரவரி, 29, 2020-இல் தலிபான்களுடன் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையிம் அமெரிக்க திரும்ப பெற்றது. இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. ஓராண்டுகளாக துயரத்தின் பிடியில் ஆப்கன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை, மறுபுறம் தலிபான்களின் கடுமையான விதிகள். இதற்கு மத்தியில் ஆப்கன் மக்களின் வாழ்வு போராட்டமாக மாறிவிட்டது. மேலும், அங்கு வாழும் பெண்கள் கார் ஓட்ட அனுமதில் மறுக்கப்பட்டது, பொதுவெளியில் பெண்கள் தங்கள் முகம் தெரியும்படி செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது தலிபான் அரசு.
ஆப்கனில் பெண்களின் நிலை:
ஆப்கானிஸ்தானில் பெண்கள் வீட்டை விட்டு மற்ற இடங்களீல் வேலை செய்ய தடை விதித்தது. சிறுமிகள் ஆறாம் வகுப்பிற்கு பிறகு படிப்பதற்கு தடை; பொதுஇடங்களில் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்துகொள்ள வேண்டும்; பொழுபோக்கு நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க தடை; இப்படி பல்வேறு அடிப்படை உரிமைகளும் தலிபான் பொறுப்பேற்றபிறகு பெண்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன.
பயணிகளின்போது கூட ஆண்கள் உடன் இருந்தால் மட்டுமே பெண்களுக்கு அனுமதி. டி.வி.நிகழ்ச்சிகளில் கூட பெண் தொகுப்பாளர்கள்/ செய்தியாளர்கள் முகம் தெரியாதவாறு துணியால் மறைக்க வேண்டும் என்பது அங்கு விதியாக உள்ளது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்கள் மீதும் தலிபான் நடவடிக்கை எடுத்துள்ளது.
தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதில் இருந்து, அங்குள்ள பெண்களுக்கு கல்வி, வேலை, சுதந்திரமாக நடமாடுவது உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முக்கிய கொள்கை மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்த பல உரிமைகள் குழுக்கள் தலிபான்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின், தலிபான்கள் முதல் செய்தியாளர் சந்திப்பின் போது பாலின சமத்துவம் மற்றும் அனைவரின் நலவாழ்வையும் உள்ளடக்கி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். இருப்பினும், தலிபான்களின் செயல்பாடுகளில் அவை எதுவும் பிரதிபலிக்கவில்லை.
பெண்களின் நடமாட்டம், கல்வி மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் இருப்பது அங்குள்ளவர்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இதுகுறித்து ஆப்கன் பெண்கள் கூறுகையில், பெண்கள் ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்படுத்துவது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் எங்களுக்கு இங்கு அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு இல்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஊடகங்களில் பணிபுரியும் 80 சதவீத பெண்கள் வேலை இழந்துள்ளனர். நாட்டில் 18 மில்லியன் பெண்கள் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக உரிமைகளுக்காக போராடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்போது, பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கும் அனுமதியில்லை என்ற தலிபானின் முடிவுக்கு மனித உரிமை மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.