கைவசம் பல ப்ளான் இருக்கு.. இனி லாபம்தான் இலக்கு! ஸ்டார்பக்ஸின் புதிய 'சிஇஓ'வாக இந்திய வம்சாவளி!
உலக புகழ்பெற்ற ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் மிக பெரிய காப்பி நிறுவனத்தை மாற்றியமைத்து லைசால் கிருமிநாசினி தயாரிப்பு நிறுவனத்திற்கு புத்துயிர் அளித்து புகழ்பெற்றவர் லக்ஷ்மன் நரசிம்மன்.
ரெக்கிட்டின் தலைமை செயல் அலுவலராக இருந்தவர் நரசிம்மன். இது டியூரெக்ஸ் ஆணுறைகள், என்ஃபாமில் பேபி ஃபார்முலா மற்றும் மியூசினெக்ஸ் குளிர் சிரப் ஆகியவற்றையும் தயாரிக்கிறது. அவர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதையடுத்து, பைனான்சியல் டைம்ஸ் பங்கை சந்தையில் ரெக்கிட்டின் பங்குகள் 4% சரிவை சந்தித்தது.
ஸ்டார்பக்ஸ் மோசமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அதன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்க கடைகள் கடந்த ஆண்டில் தொழிற்சங்கங்களாக ஆகின. பணவீக்கம் அதிகரித்து வரும் நேரத்தில், சிறந்த சலுகைகள் மற்றும் ஊதியங்களுக்கு தொழிலாளர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
கஃபேக்களிலிருந்து தற்போது பிக்அப் மற்றும் டெலிவரியில் தனது கவனத்தை திருப்பு வணிக மாடலில் சிறிய மாற்றம் செய்துள்ளது ஸ்டார்பக்ஸ். அதே நேரத்தில் பொருட்கள் மற்றும் உழைப்புக்கான அதிக செலவுகளை எதிர் கொண்டுள்ளது அந்நிறுவனம். மேலும், சீனாவின் கொரோனா கட்டுப்பாடுகள், அமெரிக்காவின் மிக பெரிய காப்பி சங்கிலி வணிகத்தை மெதுவாக்கியுள்ளன.
நரசிம்மன், அக்டோபரில் ஸ்டார்பக்ஸில் சேர்கிறார். ஆனால், நிறுவனத்தைப் பற்றியும் அதை மாற்றியமைக்கும் திட்டத்தைப் பற்றியும் சில மாதங்கள் ஆய்வு செய்த பிறகு, ஏப்ரல் 2023 இல் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். கடையில் காப்பியை வழங்குபவருக்கு சிறந்த ஊதியம் வழங்குதல், பணியாளர் நலன் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், கடைகளை மீண்டும் மாற்றியமைத்தல் ஆகியவை அவரின் திட்டத்தில் அடங்கும்.
கெவின் ஜான்சன் ஓய்வு பெற்ற பிறகு, ஏப்ரல் மாதம் மூன்றாவது முறையாக நிறுவனத்தின் தலைமை பொறுப்பை மீண்டும் ஏற்ற இடைக்கால தலைமை செயல் அலுவலர் ஹோவர்ட் ஷுல்ட்ஸ், அதுவரை, நிறுவனத்தைத் தொடர்ந்து வழிநடத்துவார். நரசிம்மனை நிறுவனத்திற்கு வரவேற்று கடிதம் எழுதியுள்ள ஷுல்ட்ஸ், "சக்திவாய்ந்த நுகர்வோர் பிராண்டுகளை உருவாக்குவதில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட ஒரு தந்திரமிக்க மாற்றி அமைக்கும் திறன் கொண்ட தலைவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நரசிம்மன், செப்டம்பர் 2019 இல் ரெக்கிட்டில் சேர்ந்தார். 1999 இல் ரெக்கிட் உருவாக்கப்பட்டது முதல் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் வெளி நபர் நரசிம்மன் ஆவார்.
முன்னதாக, பெப்சிகோவில் அதன் உலகளாவிய தலைமை வணிக அலுவலராக பணிபுரிந்த 55 வயதான நரசிம்மன், விற்பனை சரிவுக்குப் பிறகு நிறுவனத்தை புத்துயிர் பெற உதவினார். பின்னர், தனது நிர்வாக பாணிக்காக ரெக்கிட் முதலீட்டாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார்.