மேலும் அறிய

Srilanka : கோட்டபய ராஜபக்‌ஷ அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்.. இதையும் படிங்க..

உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கோட்டபய ராஜபக்‌ஷ அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ,எரிபொருள் தேவைக்காக மத்திய கிழக்கு நாடுகளைத்தான் நம்பி இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் எரிபொருளை இலங்கை பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையில் ஏற்பட்ட சில அரசியல் குளறுபடியால், ஆளுங்கட்சி ,எதிர்க்கட்சியின்  அரசியல் சதிகளுக்கிடையே சிக்கி மத்திய கிழக்கு நாடுகளோடு இலங்கை பகைத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  இந்நிலையில் இலங்கை அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு சில முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்கும், சில முஸ்லிம் அமைப்புகளுக்கும் தடை விதித்தது. அதில் முக்கியமாக  2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  கோயில்களில் நடைபெற்ற ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.
 
அந்த வகையில் அவற்றை நடத்தியது இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என அப்போது இலங்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இயங்கும் சில நிறுவனங்கள் என பலவற்றுக்கு தடை விதித்தனர். அதன் தொடர்ச்சியாகவே இலங்கையில் ஆட்சி மாற்றம், அதன் பின்னரான பொருளாதாரச் சரிவு என்பன கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கின. மேலும் மத்திய கிழக்கு நாடுகளின்  எரிபொருளை நம்பி இருந்த இலங்கைக்கு ,அதன் பின்னர் அவர்கள் மீதான நம்பிக்கையற்றதன்மை காரணமாக எரிபொருள் வருவதும்  தடைப்பட்டதாகவே தெரிகிறது.
 
Srilanka : கோட்டபய ராஜபக்‌ஷ அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்.. இதையும் படிங்க..
 
இலங்கையில் 2019 க்கு பின்னர் நிறைய மாற்றங்கள் ஏற்பட தொடங்கின . அப்போதிருந்த மைத்திரிபால சிறிசேன ,ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசை  எப்படியாவது வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க ,மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர்  பல்வேறு வியூகங்களை வகுத்து வந்தனர் . அப்போதுதான் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் ஆலயங்களில் நடைபெறுகிறது. இதனை அடுத்து அங்கு கிடைத்த தரவுகளின் படி இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டது. இலங்கையில் ஏகப்பட்ட  மத்திய கிழக்கை சேர்ந்த முஸ்லிம் நாடுகள்  பல்வேறு முதலீடுகளைச் செய்திருந்தன . அங்கு நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களில் ‌ இஸ்லாமிய நாடுகள் முக்கிய பங்கு வகித்தன. இலங்கையில் மத்திய கிழக்குச் சேர்ந்த முஸ்லிம் நாடுகள் பல நிறுவனங்களை தொடங்கியிருந்தன ,அதேபோல் இஸ்லாமிய பாடசாலைகளை அங்கு நடத்தி வந்தன .இவ்வாறு இலங்கையின் அபிவிருத்தியில் மத்திய கிழக்கை சேர்ந்த முஸ்லிம் நாடுகள் பெரும்  பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அமைப்புகளை இலங்கையில் தடை செய்த காரணத்தால் பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவுவதில் இருந்து பின்வாங்க தொடங்கின.
 
Srilanka : கோட்டபய ராஜபக்‌ஷ அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்.. இதையும் படிங்க..
 
மேலும் தமது சமூகத்தைச் சேர்ந்த அப்பாவிகள் சிலர் இந்த விசயத்தில் பலிக்கடா ஆக்கப்பட்டதை அறிந்த இஸ்லாமிய நாடுகள் கோத்தபாய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. கோத்தபாய அரசு ஆட்சிபீடம் ஏறியவுடன் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் இருந்து சற்று ஒதுங்க ஆரம்பித்தன. இலங்கையில் 2019 காலகட்டத்தில் அங்குள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு இடையே  சிறிய சிறிய பாகுபாடுகள் தோன்றியது. பின்னர் அது இரு தரப்பினரும் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு சண்டையாக மாறியது . அதற்கு முன்பிருந்தே ராஜபக்ஷ குடும்பத்தினர் இலங்கையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வகைகளில் யூகங்களை வகுத்து வந்தனர்.
 
இலங்கையில் அப்போதிருந்த மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக உள்ளிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக புத்த பிட்சுகள் ,பௌத்த மதத்தைச் சார்ந்த சிங்கள மொழி பேசும் மக்கள் மற்றும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையே அடிதடி, பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள்  என பல்வேறு சம்பவங்கள் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போதுதான் கிறிஸ்தவ ஆலயங்களில் இந்த வெடிகுண்டு சம்பவம்  நடைபெற்றது .
 
Srilanka : கோட்டபய ராஜபக்‌ஷ அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்.. இதையும் படிங்க..
 
இதனால்  இலங்கைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குமான உறவில் சற்று விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் எரிபொருட்களை மட்டும் வழங்கவில்லை ,உணவுப் பொருள், அத்தியாவசிய பொருள் என அங்கு வாழும் மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை உதவிகளை  செய்து வந்தன. அதேபோல் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு லட்சக்கணக்கானோர் வேலைக்கு   சென்றுள்ளார்கள் . ஆகவே இலங்கைக்கும் ,மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில்  ஒரு நீண்ட கால தொடர்பு பேணப்பட்டு வந்தது. இறுதியில்   இஸ்லாமிய அமைப்புகள் ,இஸ்லாமிய நிறுவனங்கள் இவற்றுக்குப்  இலங்கையில் தடை விதிக்கப்பட்டது . இதன் பின்னர் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ,மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை நட்பிலிருந்து  ஓரளவு பின்வாங்கியது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு போக்குவரத்து முடங்கி இருக்கிறது. மீண்டும் இலங்கை அரசு மத்திய கிழக்கு நாடுகளை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் குழு கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
 
Srilanka : கோட்டபய ராஜபக்‌ஷ அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்.. இதையும் படிங்க..
அப்போது இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே தலைமையிலான அரசு வெளியேறிய பின்னரே, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை தங்களால் வழங்க முடியும் என கட்டார் அரசு தலைவர் தெரிவித்ததாக இலங்கை ஊடகங்கள் தகவல்  வெளியிட்டுள்ளன. கட்டார் அரசு ,இலங்கை அமைச்சர்களிடம் மேலும் பல நிபந்தனைகளையும் விதித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
 
அதேபோல் இலங்கையில் கொரோனா காலகட்டத்திலும் ஒரு சம்பவம் பதிவாகி உள்ளது. அதனையும் மத்திய கிழக்கு நாடுகள் தற்போது சுட்டிக்காட்டி இருக்கின்றன. கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்ய   ,சுகாதார அமைப்பின்  விதிமுறைகளுக்கு அமைய அனுமதி வழங்குமாறு, உலக இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்திருக்கிறது.
 
உலக இஸ்லாமிய நாடுகள் விடுத்த கோரிக்கையை ஏற்காமல், இலங்கை அரசு இறுதிக் கிரியை செய்தது குறித்து அந்நாடுகள் முஸ்லிம் சமூகம் மீதான  அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இவ்வாறான காரணங்களை உள்ளடக்கி தற்போது சூட்சுமமான முறையில் கட்டார் உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. கடந்த பத்து வருட காலங்களில் ஐரோப்பிய நாடுகளை விட ,மத்திய கிழக்கு நாடுகள் தான் இலங்கையில் அதிகளவான ஆதிக்கம் செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது . இலங்கையின் உற்பத்திகள், ஏற்றுமதிகள் ,மக்களுக்கான சலுகைகள் ,வணிக தொடர்பு, தொழில் பங்களிப்பு என அனைத்திலும் மத்திய கிழக்கு நாடுகள் பெரும்பாலான துறைகளில் இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுத்தன.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget