மேலும் அறிய

Suez Canal: சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல்.. கடலில் ஏற்பட்ட ட்ராஃபிக்! அஃபினிட்டி வி சம்பவம்!

மீண்டும் மிதக்க தொடங்கிய அஃபினிட்டி வி கப்பல்.

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற  அஃப்ராமேக்ஸ் டேங்கர் அஃபினிட்டி வி (Aframax tanker Affinity) Vகப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியுள்ளதாக சூயஸ் கால்வாய் ஆணையம் (Suez Canal Authority (SCA)) தெரிவித்துள்ளது. 

சிங்கப்பூரை சேர்ந்த எரிபொருள்  கப்பலான அஃபினிட்டி வி சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்த் நாடின் சூயல் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, கப்பல் கால்வாயின் பக்கவாட்டில் சிக்கிக்கொண்டது.  64,000 டன் எரிபொருள் கொண்ட டேங்கர் கப்பலான அபினிட்டி வி 2016- இல் வடிவமைக்கப்பட்டது.  இது 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது. போர்ச்சுகலில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், சவுதி அரேபிய செங்கடல் துறைமுகமான யான்பு வரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தப் பயணத்தின் போது, எதிர்பாராவிதமாக சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,நேற்று இரவு  அஃபினிட்டி வி கப்பல்  கால்வாயில் 143வது கிமீ தொலைவில், கரை ஒதுங்கியது. அங்கேயே நின்றுகொண்டிருந்தது. இதனால், அந்த வழித் தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மற்ற கப்பல்கள் ஏதும் இந்த வழியாக செல்ல முடியாமல் போனது. 

பின்னர்,  5-க்கும் மேற்பட்ட டக் படகுகள்  (tugboat assistance) உதவியுடன்  ராட்சத சரக்கு கப்பலை கரையில் இருந்து இழுத்து மீண்டும் மிதக்க வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு,  அஃபினிட்டி வி கப்பல் மிதக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து  சூயஸ் கால்வாயில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.

சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி கூறுகையில், கப்பலின் திசைமாற்றி பொறிமுறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் அது கால்வாயின் கரையில் சிக்கியதாக கூறினார். தற்பொது அஃபினிட்டி வி கப்பல் தெற்கு நோக்கி மெதுவாக தனது பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ? - ட்ரம்பின் மாற்றத்திற்கு காரணமென்ன?
ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ? - ட்ரம்பின் மாற்றத்திற்கு காரணமென்ன?
மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?
மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?
கொண்டாடப்படும் ஐ.நா சபை தினம் ! - ஐ.நா சபை எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?
கொண்டாடப்படும் ஐ.நா சபை தினம் ! - ஐ.நா சபை எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Embed widget