Sexist Advertisement | அரை நிர்வாணமாக பெண்கள்.. சவப்பெட்டிக்கு இது தேவையா? விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு!
அரை நிர்வாண பெண்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
![Sexist Advertisement | அரை நிர்வாணமாக பெண்கள்.. சவப்பெட்டிக்கு இது தேவையா? விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு! Russian undertakers use semi-nude models in controversial advertisement Sexist Advertisement | அரை நிர்வாணமாக பெண்கள்.. சவப்பெட்டிக்கு இது தேவையா? விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/02/5f3ec0f03333d6391b9851829fe58037_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மிகக் சிறிய நேரத்துக்குள் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய பொறுப்பு விளம்பரங்களுக்கு உண்டு. அதற்காக பல வித்தியாசங்களையும், ரசனைகளையும் விளம்பரங்களில் பயன்படுத்துவார்கள். வித்தியாசம், ஈர்ப்பு என யோசித்துக்கொண்டே சில விளம்பங்கள் சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அப்படியாக ஒரு விளம்பரம் ரஷ்யாவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. வெளிநாடுகளில் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் உண்டு.
View this post on Instagram
யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கு தகவல் கொடுத்தாலே போதும். உடலை அடக்கம் செய்வது வரை அனைத்து வேலைகளையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அப்படியான ஒரு தனியார் நிறுவனம் தான் bizarre.இது வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக வித்தியாசமான விளம்பரம் ஒன்றை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
அந்த விளம்பரம் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. எல்லோருக்கும் தேவையான இறுதி மரியாதை என்ற தீமுடன் பல பெண்கள் அரை நிர்வாணமாக சவப்பெட்டிக்குள்ளேயும், சவப்பெட்டி அருகேயும் நிற்கின்றனர். தேவாலயம் போலவான கட்டிடத்துக்குள் அந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
அரை நிர்வாண பெண்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இறுதிச் சடங்குக்கும், அரை நிர்வாண பெண்களுக்கும் என்ன தொடர்பு? சவப்பெட்டி அருகே அரை நிர்வாண பெண்கள் எதுக்கு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு வித்தியாசமான விளம்பரம். இதை சர்ச்சையாக்க எதுவுமே இல்லை என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)