Netflix: சரிவை சந்தித்தாலும் ரஷ்யாவில் இருந்து முழுவதுமாக வெளியேறியது நெட்ஃப்ளிக்ஸ்
நெட்ஃப்ளிக்ஸ் தளம் மற்றும் அதன் பயன்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் அங்கு கிடைக்காது.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து தனது செயல்பாடுகளை முற்றிலுமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் அங்குள்ள சந்தாதாரர்கள் ஸ்ட்ரீமிங் தளத்தில் இதன்மூலம் இந்த தளத்துக்கான தங்களது கணக்கை இழந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், உக்ரைனில் ஏற்பட்ட மோதலால் மாஸ்கோவில் இருந்து நடவடிக்கைகளை விலக்கிக் கொண்ட சமீபத்திய மேற்கத்திய நிறுவனமாக நெட்ஃப்ளிக்ஸ் கருதப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தளம் மற்றும் அதன் பயன்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் அங்கு கிடைக்காது. மேலும் நெட்ஃப்ளிக்ஸ் செய்தித் தொடர்பாளரின் அறிக்கையின்படி, சந்தாதாரர்களுக்கு இனி அக்ஸஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இனி ரஷ்ய சந்தையில் இருந்து திரும்பப் பெறுவோம் என்று அறிவித்த நிலையில் அது தற்போது முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக நெட்ஃபிக்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த ஸ்ட்ரீமிங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வாடிக்கையாளர்களை துண்டிப்பதற்கு முன் நிறுவனம் தற்போதைய பில்லிங் சுழற்சியின் இறுதி வரை காத்திருந்தது. மாஸ்கோ தனது ஆயிரக் கணக்கான போர் துருப்புக்களை உக்ரைனிற்கு அனுப்பிய பின்னர், ரஷ்யாவிலிருந்து விலகுவதாக மார்ச் மாத தொடக்கத்திலேயே அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்தது.
View this post on Instagram
நெட்ஃப்ளிக்ஸ் உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது, 2021ன் இறுதியில் இந்த நிறுவனத்துக்கு 221.8 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர், ஆனால் ரஷ்யாவில் ஒரு சிறிய செயல்பாட்டு நிறுவனமாகவே நெட்ஃப்ளிக்ஸ் இருந்தது. இந்த நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஏப்ரல் மாதம் எழுதிய கடிதத்தில், ரஷ்யாவிலிருந்து வெளியேறியதன் விளைவாக 700,000 ஊதியம் பெற்ற சந்தாதாரர்களை இழந்ததாகக் கூறியது.
பிப்ரவரி 24 அன்று உக்ரைனில் ரஷ்யாவில் தாக்குதல் தொடங்கப்பட்டதிலிருந்து செயல்பாடுகளை இடைநிறுத்துவதாக அல்லது ரஷ்யாவிலிருந்து முற்றிலும் திரும்பப் பெறுவதாக அறிவித்த வெளிநாட்டு நிறுவனங்களில் நெட்ஃபிக்ஸ் நிறுவனமும் ஒன்றாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்