மேலும் அறிய

Russias Wagner Mercenary : எங்கே போனார் ரஷிய அதிபர் புதின்? வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சிக்கு பிறகு நடந்தது என்ன?

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி முடிவுக்கு வந்த பிறகு, முதல்முறையாக வீடியோ செய்தி வெளியிட்டு மக்கள் முன் தோன்றியுள்ளார்

கடந்த 16 மாதங்களாக, உக்ரைன் போர் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி  வரும் நிலையில், அதில் திடீர் திருப்பமாக ரஷியா ஆதரவு கூலிப்படை ரஷியா ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியது. குறிப்பாக, ரிஷிய நாட்டு ராணுவ தலைமையை கவிழ்க்க போவதாக வாக்னர் கூலிப்படை எச்சரிக்கை விடுத்தது.

உலக நாடுகள் மத்தியில் பதற்றம்:

ரஷிய தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்து செல்ல, தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படைக்கு அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உத்தரவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்தரவு பிறப்பித்த வேகத்துடனேயே அதனை திரும்ப பெற்றார் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின்.

இரவு நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் ரஷிய அரசுக்கும் வாக்னர் கூலிப்படைக்கும் சுமூகமான தீர்வு ஏற்பட நாட்டை விட்டு செல்ல பிரிகோஜின் ஒப்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பலனாக, அவருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பிரச்னை முடிவுக்கு வந்த போதிலும், உலகின் அதிகாரமிக்க தலைவரான புதினுக்கு எதிராக சொந்த நாட்டு கூலிப்படையே திரும்பியது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால், அவரின் செல்வாக்கு சரியும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியில், ரஷிய அதிபர் தற்போது எங்குள்ளார் என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்கள் முன் தோன்றி ரஷிய அதிபர் புதின்:

இந்நிலையில், வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி முடிவுக்கு வந்த பிறகு, முதல்முறையாக வீடியோ செய்தி வெளியிட்டு மக்கள் முன் தோன்றியுள்ளார் புதின். "எதிர்காலத்தின் பொறியாளர்கள்" என்று அழைக்கப்படும் இளைஞர் மன்றத்தில் புதின் உரையாற்றினார். கடுமையான வெளிப்புற சவால்களை எதிர்கொண்டு நாட்டின் தொழில்துறையின் நிலையான செயல்பாட்டை உறுதி செய்ததற்காக நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

வாக்னர் கூலிப்படை - யார் இவர்கள்?

பிஎன்சி வாக்னர் எனப்படும் வாக்னர் கூலிப்படை, ரஷிய நாட்டின் துணை ராணுவ அமைப்பாகும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்து வருகிறது. அடிப்படையில், இது ஒரு தனியார் ராணுவ அமைப்பாகும். கூலிப்படையினரை கொண்டு இயங்கி வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய சார்பு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிக்கும் போது இந்த குழு முதலில் 2014இல் அடையாளம் காணப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே இந்த  ரகசிய அமைப்பு இயங்கி வந்தது. இந்த குழுவில் ரஷியாவின் உயரடுக்கு படைப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 5,000 போராளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், உக்ரைன் போரில் வாக்னர் கூலிப்படையால் இப்போது 50,000 போராளிகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் என்றும் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது என்றும் ஜனவரி மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள பக்முட் நகரை ரஷியா கைப்பற்றியதில் வாக்னர் குழு முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. கொடூரமாகவும் இரக்கமற்றும் செயல்படுவதில் பிரபலம் அடைந்துள்ளது வாக்னர் கூலிப்படை.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, லிபியா மற்றும் மாலி உட்பட ஆப்பிரிக்கா முழுவதும் வாக்னர் கூலிப்படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மேற்கத்திய நாடுகளும் ஐ.நாவும் குற்றம் சாட்டி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Embed widget