மேலும் அறிய

Princess Mako | கல்லூரி நண்பரை மணந்த ஜப்பான் இளவரசி.. போராட்டத்தில் குதித்த மக்கள்..

சாமானியரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசுக் குடும்ப பட்டத்தை இழந்ததோடு தனக்கு சீதனமாக அளிக்கப்படவிருந்த 7000 கோடி ரூபாயையும் வேண்டாம் என சொல்லிவிட்டார் இளவரசி மகோ.  

ஜப்பான் இளவரசி மகோ, ஒரு சாமானியரைத் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டோக்கியோவில் ஜப்பானியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜப்பான் இளவரசி மகோ, அரண்மனையிலிருந்து வெளியேறி தனது காதலர் கொமுரோவை நேற்று திருமணம் செய்துக் கொண்டார். ஒரு சாமானியரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசுக் குடும்ப பட்டத்தை இழந்ததோடு தனக்கு சீதனமாக அளிக்கப்படவிருந்த 7000 கோடி ரூபாயையும் வேண்டாம் என சொல்லிவிட்டார் இளவரசி மகோ.  

ஜப்பானின் பட்டத்து இளவரசரின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான மகோ அந்நாட்டை சேர்ந்த சாமானியரான கொமுரோவைப் பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தார். அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள தடை உள்ளது. அப்படி செய்தால் அதற்குபின் அவர்கள் அவர்கள் அரசுக் குடும்ப பட்டம் பறிபோய்விடும். இந்நிலையில் தடையை மீறி இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்ள எண்ணி அதற்கான ஏற்பாடுகளை செய்தபோது, கொமுரோவின் தாயார் தன்னிடம் 4 மில்லியன் யென் (ஜப்பானிய பணம்) கடன் வாங்கி திரும்ப செலுத்தவில்லை, அதில் கொமுரோவின் படிப்பு செலவுகளும் அடங்கும் என்று அவரது முன்னாள் கணவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இளவரசியின் காதலர் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தத் தவறியதாகக் கூறப்பட்டதால் அது ஜப்பானில் மிகப்பெரிய பேசுபொருளானது. அந்த பரபரப்பான விவாதங்களுக்கு மத்தியில் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கொமூரோ தனது சட்டப் படிப்பிற்காக அமெரிக்காவுக்குச் சென்றார். இது எதிர்மறை கவனத்தை (Negativity) குறைப்பதற்கான முயற்சியாகத்தான் பரவலாக பேசப்பட்டது. இது குறித்து கடந்த ஆண்டு பேசிய மகோவின் தந்தையும், பட்டத்து இளவரசருமான  அகிஷினோ தனது மகளின் திருமணத்தை ஆதரிப்பதாக கூறினார். ஆனால் அவர் பொதுமக்களின் "புரிதலை" வெல்ல வேண்டும் என்றும்  கூறினார்.

Princess Mako | கல்லூரி நண்பரை மணந்த ஜப்பான் இளவரசி.. போராட்டத்தில் குதித்த மக்கள்..

இதையடுத்து வழக்கமான சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்வதன் மூலமும் தங்களை சுற்றியுள்ள பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்தார் இளவரசி மகோ. பொதுவாக ஜப்பானில் பல்வேறு சடங்குகளுடன் அரசக் குடும்ப திருமண நிகழ்வுகள் நடைபெறும். இந்நிலையில் இந்த ஜோடி பாரம்பரிய சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதேபோல அரச குடும்ப பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளும்போது குடும்பத்தின் சார்பில் வழங்கப்படும் மிகப்பெரிய தொகையான   4 மில்லியன் யென் (12மில்லியன் அமெரிக்க டாலரையும்) வேண்டாம் என சொல்லியுள்ளார் இளவரசி. இந்த பணத்தை வேண்டாம் என சொல்கிற முதல் இளவரசி மகோதான். இதற்குமுன் அந்த குடும்பத்தில் யாரும் அவ்வாறு சொல்லியதில்லை. 

இந்நிலையில் மகோ இன்று ஒரு சாமானியரை திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு வாரிசுகள் பிறந்தால் அவர்களும் அரசக் குடும்பத்தின் வாரிசுகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச கும்பத்தின் பெயரையும் தனது பெயருக்குப் பின்னால் மகோ பயன்படுத்த மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது, இளவரசி மகோ ஒரு சாமானியரைத் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ‘ஜப்பான் மற்றும் அரசக்குடும்பத்தின் எதிர்காலம் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்’ போன்ற பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  “இந்த திருமணம் பிரச்சினைகள் நிறைந்தது. அரசுக் குடும்பம் குற்றங்களில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை” என்றும் அவர்கள் தெரிவித்தனர். 
முன்னதாக, திருமணம் குறித்த சர்ச்சை எழுந்தபோது பல்வேறு இடையூறுகளின் காரணமாக இளவரசி மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

Princess Mako | கல்லூரி நண்பரை மணந்த ஜப்பான் இளவரசி.. போராட்டத்தில் குதித்த மக்கள்..

இந்நிலையில் எங்கள் திருமணம் காரணமாக யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக மகோ தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget