PM Modi Trump Meeting: மோடி - டிரம்ப் சந்திப்பு எப்போது? பேசப்போகும் முக்கியமான விசயம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு விரைவில் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சந்திப்பில் பல முக்கியமான விசயங்கள் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

PM Modi Trump Meeting: இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு விரைவில் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சந்திப்பில் பல முக்கியமான விசயங்கள் பேசப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியா - அமெரிக்கா பிரச்சனை:
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே தொடர்ந்து வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது. அதாவது, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்தியாவின் இந்த செயல்பாடு அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. காரணம் என்னவென்றால், இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயை ரஷ்யா உக்ரைன் உடனான போருக்காக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை வைக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதையும் வெளிப்படையாகவே சொல்லி வருகிறது.
அந்தவகையில், அமெரிக்காவின் எரிசக்தி துறை அமைச்சர்,"நாங்கள் இந்தியாவை தண்டிக்க விரும்பவில்லை. பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்கலாம், ஆனால் ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குகிறது. அவர்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும். அதுதான் எங்கள் நிலைப்பாடு. அமெரிக்காவிற்கும் விற்க எண்ணெய் இருக்கிறது, மற்ற அனைவருக்கும் அப்படித்தான். உலகில் ஏராளமான எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.
இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கத் தேவையில்லை. மலிவானது என்பதால் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. யாரும் ரஷ்ய எண்ணெயை வாங்க விரும்புவதில்லை; அவர்கள் அதை தள்ளுபடி விலையில் விற்பதால் தான் இந்தியா வாங்கிறது”என்று கூறினார். இப்படி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே தொடர்ந்து வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது.
மோடி - டிரம்ப் சந்திப்பு எப்போது?
இச்சூழலில் தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு விரைவில் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் பல முக்கியமான விசயங்கள் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக ஊடகம் ஒன்றில் வெளியாகி உள்ள செய்தியில்,”வர்த்தகம் மற்றும் விசா தொடர்பான பிரச்சனை இரு நாடுகளுக்கும் இடையில் இருந்தாலும் பிரதமர் மோடி மற்றும் டிராம்பின் சந்திப்பு விரைவில் நடைபெறும்.
அவர்கள் இருவரும் சந்திப்பதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள். இருவருக்கும் இடையில் ஒரு நல்ல வலுவான உறவு இருக்கிறது”என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு டிரம்ப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த போது, எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு அற்புதமான தொலைபேசி அழைப்பில் பேசினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவர் ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார். நரேந்திரா. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உங்கள் ஆதரவிற்கு நன்றி”என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.






















