பிரமோஸ் பிரம்மாஸ்திரத்தை பிலிப்பைன்ஸுக்கு சப்ளை செய்யும் இந்தியா! : சீனாவை கட்டுக்குள் வைக்க திட்டம்?
ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
2017ம் ஆண்டு நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர் மோடி 36 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் என்கிற பெறுமையைப் பெற்றார். அதனுடன் பிலிப்பைன்ஸ் இந்தியா உறவில் ஒரு புதிய சகாப்தமும் உருவானது. அதன் விளைவாக இந்தியாவிடமிருந்து ரூ 2700 கோடி மதிப்பிலான ப்ரமோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் முடிவு செய்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் போர் பனிப்போராகத் தொடர்ந்து வரும் நிலையில் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
Philippines will acquire India’s highly advanced BrahMos supersonic cruise missile system, for $375 million. #MakeInIndia
— Major Gaurav Arya (Retd) (@majorgauravarya) January 15, 2022
https://t.co/GSkSXzpjYx
மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட ஏற்றுமதி செயல்திட்டத்தின் கீழான முயற்சிதான் இந்த பிரமோஸ் விற்பனையும்.
இந்திய அரசின் டி.ஆர்.டி.ஓ சமீபத்தில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ப்ரமோஸ் ஏவுகணையை ஐ.என்.எஸ். ஏவுகணைச் சோதனைத் தளத்தில் இருந்து பரிசோதனை செய்து பார்த்தது. எதிரி நாட்டு ஏவுகணைகளை அதன் பயணப்பாதையிலேயே சென்று தாக்கும் வல்லமை உடையது இந்த ப்ரமோஸ். தற்போது இந்த ஏவுகணைகளை பரிசோதனை செய்த பிறகே பிலிப்பைன்ஸ் அரசு வாங்கியுள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தம்மைத் தயார்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம்.
ஏவுகணைகளில் சூப்பர்சானிக், சப்சானிக்,ட்ரான்ஸ்சானிக், ஹைப்பர்சானிக், ஹை-ஹைப்பர் சோனிக் மற்றும் ரீ-எண்ட்ரிஸ்பீட் என மொத்தம் ஆறு வகைகள் உள்ளன. இவற்றில் மணிக்கு 950 கிமீக்கும் குறைவான வேகத்தில் பாயும் ஏவுகணைகளை மேக் சப்சானிக் என்றும் அதற்கு மேல் அதிகரித்து மணிக்கு 30,626 கிலோமீட்டர் வேகத்தில் பாயும் ஏவுகணைகளை ரீ எண்ட்ரிஸ்பீட் ஏவுகணைகள் என்றும் சொல்லுவார்கள். இதில் பிரமோஸ் சூப்பர்சானிக் வகையைச் சார்ந்தது. இவை மணிக்கு 1,470 கிலோமீட்டர் முதல் 6,126 கிலோமீட்டர் வரை சீறிப் பாயக் கூடியது. இந்த ஏவுகணைகளில் ஸ்டீல்த் டெக்னாலஜி எனப்படும் எதிரிகளின் கண்களுக்குப் புலப்படாமல் செல்லும் டெக்னாலஜி இணைக்கப்பட்டுள்ளது. இது அல்லாமல் தொடங்கிய இடத்தில் இருந்து இலக்கை அடையும் வரை சூப்பர்சானிக் ஏவுகணைகளுக்கான வேகத்திலேயே பயணிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானம்,போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் தரை என எங்கிருந்து வேண்டுமானாலும் இதனை இயக்கலாம். இலக்கை அடைவதற்கு இந்த ஏவுகணைக்கு வழிகாட்டத் தேவையில்லை அதுவே பயணிக்கும் வகையிலான ஃபயர் அண்ட் ஃபர்கெட் டெக்னாலஜி இதில் பொறுத்தப்பட்டுள்ளது. 200 கிலோ எடையுள்ள வெடிகுண்டை 10 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தில் இவற்றால் ஏவ முடியும்.