Pakistan PM: இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம் - மனம் திறந்த பாகிஸ்தான் பிரதமர்..!
இந்தியாவுடனான போர்களால் மக்களின் துயரம், வறுமை மற்றும் வேலையின்மை மட்டும் தான் ஏற்படுத்தியுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறினார்.
![Pakistan PM: இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம் - மனம் திறந்த பாகிஸ்தான் பிரதமர்..! Pakistan has learnt its lesson PM Shehbaz Sharif Open Talk on wars with India Pakistan PM: இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம் - மனம் திறந்த பாகிஸ்தான் பிரதமர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/f58d537baf0c16fa0346909dbb38a7821673937694866224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவுடனான போர்களால் மக்களின் துயரம், வறுமை மற்றும் வேலையின்மை மட்டும் தான் ஏற்படுத்தியுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தியாவுடனான மூன்று போர்களுக்குப் பிறகு தேசம் பாடம் கற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியுள்ளார், மேலும் பாகிஸ்தான் அமைதியை விரும்புவதாக கூறியுள்ளார்.
அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஷேபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு மேலும் ஒரு உத்திரவாதத்தினை அளித்தார், பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது, இருப்பினும் காஷ்மீரில் நடப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும், அதனை மிகச் சாதாரணமாக புறக்கணிக்கப்பட மாட்டாது என்று கூறினார்.
"Pakistan has learnt its lesson..." Shahbaz Sharif's message to India
— ANI Digital (@ani_digital) January 17, 2023
Read @ANI Story | https://t.co/f1xiDVmMS7#Pakistan #ShahbazSharif #India #Kashmir #indiapakistan pic.twitter.com/abws52emTw
“எங்களிடம் பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் உள்ளனர். இங்கிருக்கும் வளங்களையும், திறமைகளையும் கொண்டு நாட்டினை செழிப்புக்காகவும், பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவரவும் நாங்கள் தொடர்ந்து உழைக்கவுள்ளோம். அதனையே நாங்கள் விரும்புகிறோம், இதனால் இரு நாடுகளும் வளர முடியும், ”என்று ஷெரீப் அந்த பேட்டியில் கூறினார்.
“அமைதியாக வாழ்வதும் முன்னேறுவதும், அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நேரத்தையும் வளங்களையும் வீணாக்குவதும் நம் கையில்தான் உள்ளது. நாங்கள் இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தியுள்ளோம், மேலும் அவை மக்களுக்கு மேலும் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே கொண்டு வந்துள்ளன. நாங்கள் இந்த போர்களில் இருந்து நாங்கள் பாடத்தைக் கற்றுக்கொண்டோம், எங்கள் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தால், நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
ஷெரீப், பிரதமர் மோடிக்கு அனுப்பிய செய்தியில், வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளில் பாகிஸ்தானின் வளங்களை நாங்கள் வீணடிக்க பாகிஸ்தான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் அணு சக்திகள், கடைசி வரை ஆயுதம் ஏந்தியவர்கள், போர் நடந்தால் என்ன நடந்தது என்று சொல்ல யார் வாழ்வார்கள்? எனவே போர் நடப்பதை கடவுள் தான் தடுக்க வேண்டும்" என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)