மேலும் அறிய

Watch Video | திருநர்களை அசிங்கப்படுத்துவதா? நெட்பிளிக்ஸுக்கு எதிராக வலுக்கும் போராட்டமும்! பின்னணியும் !

"“trans lives matter" ,"black lives matter ", "we like jokes" உள்ளிட்ட  பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்களின் வாக் அவுட் பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நெட்ஃபிளிக்ஸில் மிகப்பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை தேவ் சாப்பல்  (dave chappelle) என்னும் காமெடியன் செய்து வருகிறார். ஏற்கனவே இவரின் ஐந்து ஸ்டாண்ட் அப் காமெடி பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் அதாவது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இவரின் ’தி க்ளோசர்’ என்னும் பெயரிலான ஸ்டாண்டப் காமெடி வெளியானது. அந்த நிகழ்ச்சியில் LGPTQ சமூகத்தை சார்ந்த மக்களை இழிவுபடுத்தும் விதமாக காமெடி செய்ததாக விமர்சனங்கள் எழவே, இதனை எப்படி தயாரிப்பு நிர்வாகம் ஏற்றுக்கொண்டார்கள் என நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்கள் மத்தியிலேயே சலசலப்பு ஏற்பட்டது. உடனே இதற்கு கண்டனம் தெரிவித்து நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்கள் அக்டோபர் 20 ஆம் தேதி ‘வாக் அவுட்’ என்னும் கண்டன பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தது. 

இதற்கான தலைமை பொறுப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் டிரான்ஸ் பிரிவு தலைவராக இருக்கும்  கர்ப்பிணியாக இருக்கும் பெண் (பெயர் வெளியாகவில்லை) ஏற்றதாக தெரிகிறது. இந்நிலையில் அவரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளனர். அவர் LGPTQ சமூகத்தை ஆதரித்தார் என்பதற்காகவும் அவர் ஒரு கறுப்பின பெண் என்பதால்தான் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் துணிச்சலாக இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக , அப்பெண்ணின் ஆதரவாளர்கள் மற்றும்  நெட்டிசன்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.ஆனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் வேறு என்கிறார் நெட்ஃபிளிக்ஸ் செய்தித்தொடர்பாளர். அதாவது மிகவும் ரகசியமாக பாதுகாப்பட வேண்டிய சில நிர்வாக தகவல்களை அப்பெண் பத்திரிக்கையாளர்களிடம் கொடுத்ததாகவும் , அது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் நெட்ஃபிளிக்ஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது. தற்போது நெட்ஃபிளிக்ஸின்  LGBTQ  ஊழியர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமெரிக்காவின் லாஸ் எஞ்சலஸ் பகுதியில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின்  பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என சமூக வலைத்தள வாசிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி "“trans lives matter" ,"black lives matter ", "we like jokes"  ”black trans lives matter"  உள்ளிட்ட  பதாகைகளை ஏந்தி பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூட்டத்தில் ஒருவர் காமெடியன் தேவ் சாப்பலை ஆதரித்து பதாகை ஒன்றை ஏந்தி வந்தும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Spl. Train for Girivalam: கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Embed widget