மேலும் அறிய

Solar Snake : சூரியனில் பாம்பு ஊர்வதுபோன்ற காட்சி.. ஆர்பிட்டர் விண்கலம் வெளியிட்ட வீடியோ வைரல்..

ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்று இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சூரியனில் பாம்பு ஊர்வது போன்ற காட்சி அடங்கிய வீடியோவை ஆர்பிட்டர் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ளது.

அண்மையில்  நாசாவின் சன் அண்ட் ஸ்பேசஸ் டுவிட்டர் கணக்கில் பகிரப்பட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்று இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சூரியனில் பாம்பு ஊர்வது போன்ற காட்சி அடங்கிய வீடியோவை ஆர்பிட்டர் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் பிப்ரவரி 2020ல் ஒரு சூரிய ஆர்பிட்டர் விண்கலத்தை ஏவியது. சூரியனின் நிலை குறித்த தகவல்களைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விண்கலமானது செலுத்தப்பட்டது. சுமார் பத்து கருவிகளுடன் ஏவப்பட்ட இந்த விண்கலம் அவ்வப்போது சூரியன் பற்றிய தகவல்களை அனுப்புகிறது.

அந்தவகையில் குளிர்ந்த வளிமண்டல வாயுக்கள் அடங்கிய 'குழாய்' போன்ற அமைப்பு ஒன்று, சூரியனின் காந்தப்புலத்தின் வழியாக பாம்பு ஊர்வது போல செல்லும் காட்சியை படம்பிடித்துள்ளது ஆர்பிட்டர் விண்கலம்.

;

இது எப்படி சாத்தியமானது?

சூரியன பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும்.இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும், ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும். அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து பெறப்படும் ஒளிச்சக்தி தாவரங்களின் வளர்ச்சியில் பங்களிக்கிறது. நாம் தாவரங்களில் இருந்து உணவை பெற்றுக் கொள்கிறோம். நாம் தாவரங்களின் மற்றைய பாகங்களை சமையலில் எரிப்பதற்குப் பயன்படுத்துகிறோம். ஆகவே எமது அன்றாட வாழ்க்கைக்கு சூரியன் மிக அவசியமாகும்.

சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள அனைத்து வாயுக்களும் பிளாஸ்மா நிலையிலேயே உள்ளன. ஏனெனில் அங்கு வெப்பநிலை ஒரு மில்லியன் டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் உள்ளது.  இந்த பிளாஸ்மா வினாடிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்க வேண்டும் என்பது சோலார் ஆர்பிட்டர் விண்கலம் பதிவு செய்த காட்சிகளின் மூலம் தெரிகிறது. 

இந்த அரிய நிகழ்வு குறித்து இங்கிலாந்தின் முல்லார்ட் விண்வெளி அறிவியல் ஆய்வகம் (யுசிஎல்) விஞ்ஞானி டேவிட் லாங் கூறுகையில், " பிளாஸ்மா சூரியனின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் பாய்கிறது. சூரியனின் காந்தப்புலம் திருகிய கோண வடிவத்திலான அமைப்பை கொண்டுள்ளதால் வாயுக்கள் பாம்பு ஊர்வது போல செல்கின்றன " என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
Embed widget