மியான்மர் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் - போராட்டக்காரர்கள் மீது குண்டு வீச்சு.!
ராணுவத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் தற்போது நடந்துவரும் ராணுவ ஆட்சியில் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் நடப்பில் இருந்த ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து மின் ஆங் தலைமையிலான ராணுவ ஆட்சி மியான்மரை தன்வசம் வைத்துள்ளது. ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்களை இரக்கமின்றி தாக்கிவருகின்றது மியான்மர் ராணுவம்.
இந்நிலையில் நேற்று மியான்மர் ராணுவத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் யங்கொண்-னின் தெற்கு டகோன் பகுதியில் இந்த தாக்குதல் நடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் இறந்திருக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
சொந்த நாட்டில், சொந்த ராணுவத்தால் வதைக்கப்படும் மக்கள் வாழவழியின்றி தற்போது தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு தப்பியோடி வருகின்றனர். ஏற்கனவே மியான்மார் நாட்டில் இருந்து மலேசியாவிற்கு தஞ்சம் புகுந்த ரேஹகியா அகதிகளுக்கு மலேசிய அடைக்கலம் கொடுக்கலாம் மியான்மருக்கு திரும்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மணிப்பூர் அரசும் மியான்மரில் இருந்து அகதிகளாக வருவோருக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை தவிர்த்து அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At least three casualties were reported during a violent crackdown in Yangon’s South Dagon township on Monday afternoon. Apparently, junta's forces threw a grenade to the protesters which shattered the makeshift barricades. <a href="https://twitter.com/hashtag/WhatsHappeningInMyanmar?src=hash&ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#WhatsHappeningInMyanmar</a> <a href="https://t.co/v3vTIkwPRb" rel='nofollow'>pic.twitter.com/v3vTIkwPRb</a></p>— Myanmar Now (@Myanmar_Now_Eng) <a href="https://twitter.com/Myanmar_Now_Eng/status/1376513102150180868?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>