Watch Video : ஓடும் டிரக் மேல் நடனம்..! பாலத்தில் மோதி உயிரிழந்த இளைஞர்..! வைரலாகும் வீடியோ..
அமெரிக்காவில் ஓடும் டிரக்கின் மேல் ஏறி நடனமாடிய நபர் மேம்பாலத்தில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவில் ஓடும் டிரக்கின் மேல் ஏறி நடனமாடிய நபர் மேம்பாலத்தில் மோதி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
டிரக் மேல் நடனம் :
ஓடும் ட்ரக்கின் மேல் நடனமாடிய 25 வயது நபர் பாலத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஓடும் டிரக்கின் மேல் நடனமாடுவதை படம்பிடித்தவர், எதிரே வந்த பாலத்தில் மோதி உயிரிழந்தார். கடந்த வாரம், டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள ஈஸ்டெக்ஸ் ஃப்ரீவேயில், அடையாளம் தெரியாத நபர் டிரக்கின் மேல் நடனமாடும் போது எதிரே இருந்த பலத்தில் மோதிய சம்பவம் நடைபெற்றது.
நெடுஞ்சாலையில் பயணம் செய்த ஒருவர் இந்த காட்சியை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 18 சக்கர டிரக்கின் மேல் ஏறி, அந்த டிரக் சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது நடனமாடுகிறார். 25 வயது மதிக்கத்தக்கும் அந்த நபர், தனது கை கால் அசைத்து நடனமாடிக் கொண்டிருந்தார், அப்போது முதலில் வந்த மேம்பாலத்திலிருந்து தப்பிய அவர், இரண்டாவது மேம்பாலம் வரும் போது அதை கவனிக்காமல் விபத்து ஏற்பட்டது.
ஹூஸ்டன் போலீசார் இதுதொடர்பாக கூறியதாவது, பெரிய டிரக் துவான் தெரு பாலத்தின் கீழ் வழியே செல்லும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் ஆடியபடியே தன்னை வீடியோ எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. வாகன ஓட்டுநரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, ஹூஸ்டன் போலீசாரால் விடுவிக்கப்பட்டார், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திலே மரணம் :
பாதிக்கப்பட்டவர் மெமோரியல் ஹெர்மன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிரிஸ்டல் டேவிஸ் (crystal davis)என்பவர் அந்த விபத்தின் போது அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்து போனதையும்,சாலை முழுவதும் ரத்த வெள்ளமாக மாறியதையும் கண்டு மிகவும் அதிர்ந்து போனதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் வாகனங்களின் மேல் பயணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போன்ற சம்பவம் ஜூன் மாதம் நடந்தது. அதில் இளைஞர்கள் சிலர் சுரங்கப்பாதையில் கார்களுக்கு நடுவே விடியோ பதிவு செய்வது கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது.