மேலும் அறிய
Advertisement
Paris Olympic 2024 Facts: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் - 18,000 கோடி செலவு, நதி மேல் தொடக்க விழா - சுவாரஸ்ய தகவல்கள்
Paris Olympic 2024 Facts: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Paris Olympic 2024 Facts: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 வரும் ஜுலை 26ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024:
விளையாட்டு உலகின் உச்சபட்ச நிகழ்வாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள், வரும் 26ம் தேதி பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளன. இதற்காக பாரிஸ் நகரம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பற்றி, பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் இந்த தொகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:
- மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இரண்டாவது நகரம் என்ற பெருமையை பாரிஸ் பெற்றுள்ளது. முன்னதாக 1908, 1948 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்நிலையில், 1900, 1924 ஆண்டுகளை தொடர்ந்து, 2024-லும் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
- பாரிஸ் 2024 தொடக்க விழா முதன்முறையாக ஒரு மைதானத்தில் நடைபெறப்போவதில்லை. அதற்கு மாற்றாக பாரிஸின் மையப்பகுதியைக் கடக்கும் சீன் நதியின் மேற்பரப்பில் தொடக்க விழா நடைபெற உள்ளது.
- பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளின் போது 32 விளையாட்டுகளும் மொத்தம் 329 பதக்க நிகழ்வுகள் நடைபெற உள்ளன
- பாரிஸ் 2024 இல் வழங்கப்படும் நீர் சார்ந்த போட்டிகளில் தான் அதிக பதக்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, நீச்சல், மாரத்தான் நீச்சல், டைவிங், வாட்டர் போலோ மற்றும் கலை நீச்சல் என 49 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தடகளம் இரண்டாவது இடத்தில் உள்ளது
- பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் சுமார் 10, 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுத் தொடரின் முடிவில் போட்டியாளர்களின் இறுதி எண்ணிக்கை உறுதி செய்யப்படும்.
- முதன்முறையாக, 2024 விளையாட்டுப் போட்டிகள் பிரெஞ்சு பிரதேசமான டஹிடியிலும் நடைபெற உள்ளது. பாரிஸிலிருந்து 15 ஆயிரம் கிமீ தொலைவில் அமைந்துள்ள பசிபிக் தீவின் புகழ்பெற்ற டீஹூபூ அலையில் சர்ஃபிங் போட்டி நடைபெற உள்ளது.
- பாரிஸ் ஒலிம்பிக்கில் முற்றிலும் புதிய விளையாட்டு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அது பிரேக் டான்ஸ் ஆகும். ஒலிம்பிக்கில் இதற்கு முன் வேறு எந்த நடன விளையாட்டும் சேர்க்கப்பட்டதில்லை
- பாரிஸ் ஒலிம்பிக்கில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களில், ஈபிள் டவரிலிருந்து எடுக்கப்பட்ட உலோகக் கலவைகள் இடம்பெற்றுள்ளன.
- குறைந்த கார்பன் கான்கிரீட், மர கட்டமைப்புகள் போன்றவற்றை கொண்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் ஒலிம்பிக்கிறகான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
- 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நகரம் கட்டமைக்கப்பட்டுள்ளது
- 24 மணி நேரமும் திறக்கப்பட்டு 3 ஆயிரத்து 260 இருக்கைகளுடன், நாளொன்றிற்கு 40 ஆயிரம் உணவுகள் பரிமாறப்பட உள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஃபேக்ட் செக்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion