(Source: ECI/ABP News/ABP Majha)
Iphone: ஐஃபோன்களை பயன்படுத்த வேண்டாம்..திடீரென பறந்த அதிரடி உத்தரவு.. காரணம் இதுதான்
ரஷ்யாவில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் மார்ச் மாதத்திற்கு பின் ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் மார்ச் மாதத்திற்கு பின் ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு:
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போதே தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,அதிபர் நிர்வாகத்தின் முதல் துணைத் தலைவரான செர்ஜி கிரியென்கோ, இந்த மாத தொடக்கத்தில் மாஸ்கோவில் உள்நாட்டு அரசியலில் தொடர்புடைய அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிபர் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
உளவு பார்க்கப்படும் ஐபோன்?
மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகளால் ஐபோன் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐபோனில் எல்லாம் முடிந்துவிட்டது: அதை தூக்கி எறிந்து விடுங்கள் அல்லது குழந்தைகளுக்கு கொடுங்கள்". மேலும், அவற்றின் பயன்பாட்டை மார்ச் மாத இறுதிக்குள் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக, ரஷ்ய நிறுவனமான ஓபன் மொபைல் பிளாட்ஃபார்ம் உருவாக்கிய இயங்குதளமான ஆண்ட்ராய்டு, சீன சகாக்கள் அல்லது அரோரா போன்ற பிற ஸ்மார்ட்போன் மென்பொருளில் கட்டமைக்கப்பட்ட ஃபோன்களை பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரச்னை என்ன?
உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வரும் சூழலில், நடைபெற உள்ள அதிபர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில், ரஷ்ய அதிபர் புதினை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் சதி செய்யலாம் என கூறப்ப்டுகிறது. இதனால், தேர்தலில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டை தவிர்க்கும் நோக்கில், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஐபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் விற்பனைக்கு தடை:
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதுமே, ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களின் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்தியது . இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவில் மக்கள் இன்னும் புதிய ஐபோன் 14 ஐ சட்டப்பூர்வமாக்கப்பட்ட இணை இறக்குமதி திட்டங்கள் மூலம் வாங்குவதாக அறிக்கைகள் தெரிவித்தன.இதுதொடர்பாக, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கேட்டபோது, அந்த அறிக்கையை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை, ஆனால் "ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வ வணிகத்திற்கு பயன்படுத்தக்கூடாது" என்று விளக்கமளித்தார்.