watch video: ஜப்பானில் பயங்கரம் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை... அதிர வைக்கும் அதிரும் வீடியோ..!
நிலநடுக்கத்தால் டோக்கியோவில் 20 லட்சத்துக்கு அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன.
ஜப்பானில் நேற்று இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், 20 லட்சம் வீடுகளில் மின்சேவை நிறுத்தப்பட்டது.
வடக்கு ஜப்பானில் உள்ள புகுஷிமா கடற்கரையில் நேற்று 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் இரவு 8.06 மணியளவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் புகுஷிமா கடற்கரையில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இரவு 11:36 மணிக்குத் தாக்கிய சிறிது நேரத்துக்குப் பிறகு, மியாகி மற்றும் ஃபுகுஷிமாவின் சில பகுதிகள் உட்பட வடகிழக்கு கடற்கரையின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ உட்பட கிழக்கு ஜப்பானின் பெரும் பகுதிகள் குலுங்கின. டோக்கியோவில் 20 லட்சத்துக்கு அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன. நிலநடுக்கத்தால் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 80 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஜப்பான் ரயில்வே தனது பெரும்பாலான ரயில் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கும் காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது.
Strong M7.3 earthquake rocking Fukushima, this is my desk in Tokyo now - you can hear the whole apartment building shaking. Scary. pic.twitter.com/UiiM7yzmkN
— John Daub (ONLY in JAPAN) (@ONLYinJAPANtv) March 16, 2022
நிலநடுக்கம் குறித்து பிரதமர் ஃபுமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறுகையில், சேதத்தின் அளவை அரசாங்கம் மதிப்பீடு செய்து வருவதாகவும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதியளித்ததாகவும் கூறினார். மேலும், தயவுசெய்து முதலில் உங்கள் உயிரைக் காப்பாற்ற பாதுகாப்பாக இருங்கள் என்றும் கிஷிடா கூறினார்.
இதே பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு புகுஷிமா அணு உலை பேரழிவை ஏற்படுத்திய சுனாமியால் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமியில் சுமார் 18,500 பேர் இறந்தனர். சிலர் காணமல்போனார்கள்
மார்ச் 2011 இல் ஜப்பான் பேரழிவின் 11 வது ஆண்டு நிறைவைக் குறித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடுக்கம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ மீது அமர்ந்திருக்கும் ஜப்பான், தொடர்ந்து நிலநடுக்கங்களால் தாக்கப்படுகிறது. பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" என்பது தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு செயல்பாட்டின் ஒரு வளைவு ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்