Metaverse Pride Month: திருநங்கைகள், தன்பாலீர்ப்பாளர்கள், திருநம்பிகள்.. மெடாவர்ஸ் கொண்டாடும் ப்ரைட் மாதம்..
Metaverse celebrates Pride Month: பிரைட் மாதத்தை கொண்டாடும் மெட்டாவர்ஸ்.
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி நமக்கு வழங்கியிருப்பது மாய உலகான மெட்டாவர்ஸ் (Metaverse). இதை தமிழில் மெய்நிகர் தொழில்நுட்பம் என்கிறார்கள். நம் நிகழ்காலத்தில் நிஜ உலகில் இருந்துகொண்டே, டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட ஒரு உலகில் வாழ முடியும் வசதி. அப்படிப்பட்ட டிஜிட்டல் உலகான மெட்டாவர்ஸ், பிரைட் மாதத்தை கொண்டாடி வருகிறது. பிரைட் (LGBTQA) அடையாளப்படுத்தும் வண்ணக்கொடியில் இருக்கும் நிறங்களுடன் ஒரு வானவில்லை உருவாக்கியுள்ளது.
வானவில்லின் இருபுறமும் ஹேப்பி பிரைட் (Happy Pride) என்று குறிப்பிட்டு அருகில் ஒரு வண்ணங்களுடன் இதயத்தையும் வடிவமைத்துள்ளது. நாம் வாழ்ந்துவரும் பூமியிலேயே தன்பாலின ஈர்ப்பாலர்கள், Trans-.people, தன்னை Queer, Asexual- ஆக தன்னை முன்னிறுத்துபவர்களுக்கு அடிப்படையான உரிமைகள் ஏதும் கிடைப்பதில்லை. இப்பூமியில் வாழ்பவர்களிடமிருந்து மாற்றுப்பட்டு இருப்பதாலேயே அவர்கள் பல்வேறு கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், மெட்டாவர்ஸ் தொழில்நுட்ப உலகில் LGBTQA-இன் உரிமைகளை பேசும் மாதத்தில் Pride Month கொண்டாட்டத்தை அங்கு குறிப்பிட்டிருப்பது பாராட்டிற்குரியதாக உள்ளது. மேலும், பல்வேறு மெட்டாவர்ஸ் தளங்களில் Pride Parade நடைபெற இருக்கிறது.
மெட்டாவர்ஸ்- (Metaverse):
மெட்டாவர்ஸ் என்பது ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம். (Virtual Reality). அதாவது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, வேறோரு உலகில் வாழலாம். டிஜிட்டல் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி இது சாத்தியம். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை மாட்டினால், போதும் இங்கிருந்த படியே வேறோரு உலகில் இருக்கலாம். அங்கு நீங்கள் வானில் பறக்கலாம. அங்குள்ள கடற்கரையில் சூரிய உதயத்தைக் காணலாம். இவை அனைத்தும் உங்களுக்கு நிஜ உலகில் நடப்பது போன்ற உணர்வைத் தரும் என்பதே இதன் சிறப்பு. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் அவதார் திரைப்படத்தில் பார்த்து வியந்தவைகள் நம் அன்றாட வாழ்வில் ஒன்றாக மாறும் காலம் விரைவில் வரும்.
மெட்டாவெர்ஸ் என்பது இன்னும் நிஜமாக இருக்கும். உங்களின் உருவமே ஒரு அவதார் உருவமாக இருக்கும். நீங்கள் வீட்டுக்குள் இருந்தாலும் பார்க்கில் நடக்கலாம். நண்பர்களை சந்திக்கலாம். பேசலாம், விளையாடலாம், நீச்சல் அடிக்கலாம். இப்படியான உலகத்துக்குள் நீங்கள் சென்றால் இன்செப்சன் படம் போல நீங்கள் நிஜத்தில் இருக்கிறீர்களா அல்லது டிஜிட்டல் உலகில் இருக்கிறீர்களா என்ற சந்தேகம் கூட வரலாம். இதுதான் மெட்டாவெர்ஸ்.
மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்து உங்கள் நண்பர்களுக்கு கட்டி அணைப்பதை உணர முடியும். இன்னும் சொல்லப்போனால், இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில் நீங்கள் மனம், சுவையைக் கூட உணர முடியும். உங்களுக்கு ஒரு கையுறையும் (Gloves) விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியும் வழங்கப்படும். இதனால், தொடுவதன் மூலம் சூடு, குளிர் உள்ளட்டவற்றை உணர முடியும். மேலும், நீங்கள் விர்ச்சுவல் உலகில் சாப்பிட முடியும். நிஜ உலகில் உங்கள் வயற்றுக்குள் உணவு போகாது. ஆனால்,. உங்களுக்கு வயிறு முட்ட சாப்பிட்ட உணர்வு ஏற்படும். இதுதான் மாயங்கள் நிறைந்த விர்ச்சுவல் ரியாலிட்டி உலகம்.
Pride Month- (LGBTQIA+ movement):
ஜூன் மாதத்தில் தன்பாலினத்தவர் (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer, Intersex, Asexual +) தங்கள் பாலியல் சார்ந்த விருப்பங்கள் இன்னதென இதுவரை வரையறுக்காதவர்கள், அதற்கான தேடலில் உள்ளவர்கள், திருநங்கைகள், உள்ளிட்ட பல மாற்றுப்பட்ட விருப்பங்களை கொண்டிருக்கும் மனிதர்களும் இப்பூமியில் வாழ்வதற்காக உரிமைகள் உண்டு என்பதை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் ஜீன் மாதத்தில் பேரணிகள்,கருத்தரம் உள்ளிட்டவைகள் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவர்களின் உரிமைகளை உலகிற்கு உரக்க சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதை புரிந்துகொள்ள யாரும் தயாராக இல்லை. ஆண்- பெண் இருவரும் மட்டும்தான் வாழ்வில் இணைந்து வாழ வேண்டும்; ஆண்- பெண் என்ற இரு அடையாளஙகளையும் தாண்டி ஒருவர் திருநங்கையாக இருந்தால் அவர்களை வித்தியாசமாக நடத்தும் காலத்தில்தான் இன்னனும் தேங்கியிருக்கிறோம். இங்கு இதுதான் இயல்பு என்று நிர்ணயிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இந்த பிரைட் மாதம், உரிமைகள் சார்ந்த போராட்டங்களுக்கு பின் ஜியோ பாலிட்க்ஸ் இருப்பதாகவும், இதனால் மனிதனின் அடுத்த தலைமுறைக்கான உற்பத்தி தடைப்படும் என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. ஆனால், இதை எதையும் தீர்மானிப்பது ஒரு மனிதனின் இயல்புதான். நாம் நினைப்பதை, உணர்வதை வெளிப்படுத்தும் இடமே நாம் வாழ்வதற்கான இடமாக இருக்கும். LGBTQA+ - இதில் + குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம், இந்த வானவிலில் உள்ள தன்மைகளை இதுதான் என்று வரையறுக்க முடியாது. பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன.
LGBTQA+- என தங்களை முன்னிருத்துபவர்கள், திருமணம், வாழ்வில் இணை - இந்த காரணத்திற்காக மட்டுமே தங்களை இப்படி அடையாளப்படுத்துவதில்லை. அதையும் தாண்டி பணியிடங்களில் உரிமைகள், வாழ்வதற்காக உரிமைகளுக்கே முன்னுரிமை என்பதை உணரவேண்டும்.
மெட்டாவர்ஸ் உலகில் பிரைட் பரேட் நடக்கிறது என்பது மகிழ்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. ஏனெனில், நிஜ உலகில் இவர்கள் தொடர்ந்து உரிமைக்காக போராடிகொண்டுதான் இருக்கிறார்கள். கேலி, கிண்டல், உள்ளிட்ட பல வன்முறைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.
என்ன தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், மனம் அசாத்திய மாயாஜாலங்களை அறிந்திருக்கும் ஒன்று. நான் யார் எனும் தேடல் பயணத்தில் இருப்பவர்களுக்கும், LGBTQA+ என்பதாலேயே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியுடன் வாழ போராடு அனைவருக்கும் ஹேப்பி பிரைட்.