Israel Syria Attack : மீண்டும் பதற்றம்...சிரியாவில் இருந்து ராக்கெட் தாக்குதல்...பதிலடி கொடுத்த இஸ்ரேல்...போலீசார் குவிப்பு...!
இஸ்ரேல் நாட்டின் மீது சிரியாவில் இருந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Israel Syria Attack : இஸ்ரேல் நாட்டின் மீது சிரியா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மீண்டும் பதற்றம்
இஸ்ரேல் நாட்டின் மீது அதன் வடகிழக்கு எல்லையில் அமைந்த சிரியாவில் இருந்து ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 3 ஏவுகணைகளை இஸ்ரேல் நாட்டின் மீது சிரியா வீசியுள்ளது. லெபனான், காசா நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேசமயம் முதலில் வீசப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் தடுத்து அழித்துள்ளது.
3 rockets were launched from Syria into Israel a short while ago. 1 of them crossed into Israeli territory and landed in the southern Golan Heights.
— Israel Defense Forces (@IDF) April 8, 2023
No interceptors were launched in accordance with policy.
இதற்கு அடுத்து, இரண்டாவது ஏவுகணையானது திறந்த வெளியில் விழுந்துள்ளது. சிரியாவுக்கு அருகில் ஜோர்டான் நாட்டு எல்லை பகுதியில் மற்றொரு ஏவுகணை விழுந்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்களுக்கு தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. ரமலான் பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் தாக்குதல் நடத்தது பெரும் பதறத்தை கிளப்பியுள்ளது. இதற்காக ஜெருசேலத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் பதற்றம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் படைகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு படைகளுக்கும் இடையே வான் வழி தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான சண்டை நீண்டகாலமாக நடந்து வந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்கக் காரணம் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் ஒரு பழைமை வாய்ந்த மசூதி .
இந்த மசூதி இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இதனால் இப்பகுதியை பாலஸ்தீனியர்கள் தங்களுடையது என்கின்றனர். அதற்கு இஸ்ரேலும் சொந்தம் கொண்டாடுகிறது. இந்தச் சூழலில் இன்று இஸ்ரேல் நாட்டின் வடகிழக்கு எல்லையில் அமைந்த சிரியாவில் இருந்து ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், இஸ்லாமிய மதத்தினரின் புனித மாதமான ரமலான் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான அல் அக்சா மசூதில் ஆயிரக்கணக்கான யூதர்களும் இன்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட உள்ளனர். இதனால் ஜெருசலேமில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க
Nigeria : நைஜீரியாவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 50 பேர் உயிரிழப்பு...!