மேலும் அறிய

ISIS : ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம் அம்பலம்.. இந்திய தலைவரை கொல்ல தற்கொலை படை தாக்குதல்.. பரபரப்பு தகவல்..

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவை சேர்ந்த தற்கொலை படை பயங்கரவாதியை ரஷிய மத்திய பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவை சேர்ந்த தற்கொலை படை பயங்கரவாதியை ரஷிய மத்திய பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்தியாவின் மூத்த தலைவர் ஒருவரை கொல்ல அவர் திட்டமிட்டிருந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து ரஷிய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய மத்திய பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், "ரஷியாவில் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு படை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது.

அவர் மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இந்திய ஆளும் வர்க்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை தற்கொலை படை தாக்குதலின் மூலம் கொல்ல பயங்கரவாதச் செயலைச் செய்யத் திட்டமிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் துருக்கியில் இருந்து தற்கொலை படை பயங்கரவாதியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஆட் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஐஎஸ்ஐஸ் மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, மத்திய அரசால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தனது சித்தாந்தத்தைப் பரப்ப பல்வேறு இணைய அடிப்படையிலான சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், இணையத்தை உன்னிப்பாகக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்தில், முகமது நபிகள் குறித்து பாஜகவின் நூரப் சர்மா சர்ச்சைக்குரிய விதமாக பேசியது உலகளவில் பெரும் எதிர்ப்பாக கிளம்பியது. குறிப்பாக, அரபு நாடுகள் வெளிப்படையாகவே எதிர்பினை பதிவு செய்தன. இதையடுத்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

இந்த சம்பவத்திற்கு இடையே, தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் திட்டம் அம்பலம் ஆகி உள்ளது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
Jet Crash: மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
ஏவுகணைகளை பெற அமெரிக்காவுடன் ஒப்பந்தம்! - தீவிரமடையும் போர்: ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் உக்ரைன்!
ஏவுகணைகளை பெற அமெரிக்காவுடன் ஒப்பந்தம்! - தீவிரமடையும் போர்: ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் உக்ரைன்!
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
TASMAC: குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்...100 மீட்டருக்குள் பார்.. தமிழக அரசின் புது ரூல்ஸ்! முழு விவரம் இதோ!
TASMAC: குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்...100 மீட்டருக்குள் பார்.. தமிழக அரசின் புது ரூல்ஸ்! முழு விவரம் இதோ!
AFG Cricket: அசத்தும் ஆஃப்கானிஸ்தான்! பின்னுக்குப் போன இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்! தரவரிசையில் இப்படி ஒரு ஏற்றமா?
AFG Cricket: அசத்தும் ஆஃப்கானிஸ்தான்! பின்னுக்குப் போன இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்! தரவரிசையில் இப்படி ஒரு ஏற்றமா?
TN Luxury Cars: டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
Embed widget