மேலும் அறிய
Advertisement
இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோடி
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இலங்கையின் நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேபோல் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களின் பரஸ்பர நலனுக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது, இரு நாடுகளுக்கு இடையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறையில் முதலீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion