Will Smith: கன்னத்தில் ஒரு அறை.. அடுத்தடுத்து சிக்கல்கள்.. ஆஸ்கர் அமைப்பிலிருந்து விலகிய வில் ஸ்மித்!!
ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பில் இருந்து பதவி விலகினார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்.
ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பில் இருந்து பதவி விலகினார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். காமெடி நடிகர் கிறிஸ் ராக்ஸ் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தநிலையில், academy of motion picture arats and science அமைப்பின் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தனது மனைவி ஜடா பிங்கெட் (Jada Pinkett) பற்றி உருவக்கேலி செய்ததற்காக ஆஸ்கர் விருது நிகழ்வில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை (Chris Rock) டிகர் வில் ஸ்மித் (Will Smith), கன்னத்தில் அறைந்தார்.
இதையடுத்து, நடிகர் வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்கர் அகாடமி தெரிவித்திருந்தது. இதுகுறித்து ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம் ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் வில் ஸ்மித்திடம் விசாரணை நடைபெற்று வந்தநிலையில், தலைமைக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் அதன் பிறகு வில் ஸ்மித் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
View this post on Instagram
முன்னதாக, வில் ஸ்மித் அறைந்த வீடியோ வைரலாகி, பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. பின்னர், வில் ஸ்மித் தான் நடந்து கொண்டதற்கு, நான் என்றைக்கும் அன்பு மற்றும் அக்கறைக்கான தூதனாக இருக்க விரும்புகிறேன். நான் இப்படி நடந்து கொண்டததற்காக ஆஸ்கர் விழா குழுவினர், மற்றும் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.’ என்றார். ஆனால், அவர் கிறிஸ் ராக்கிடன் மன்னிப்பு கேட்பதாக கூறவில்லை.
பின்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,ஒரு விழா மேடையில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. காதல் உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்ய வைக்கும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்