Watch Video: கையிலே சாகசம்... நிமிடத்தில் பேஸ்பால் பேட்களை தெறிக்கவிட்டு கின்னஸ் சாதனை.. வைரல் வீடியோ
பேஸ்பால் பேட்களை அடித்து உடைத்து கின்னஸ் சாதனை படைக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
கின்னஸ் உலக சாதனை படைப்பது பலருடைய கனவாக உள்ளது. இதற்காக பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த முயற்சி தொடர்பான வீடியோ வெளியாகும் படசத்தில் அது வேகமாக வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது கின்னஸ் உலக சாதனை பக்கம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் பேஸ்பால் பேட்களை சிலர் உடைத்து கின்னஸ் சாதனை செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக கின்னஸ் சாதனை பக்கம் வெளியிட்டுள்ள வீடியோவில் முதலில் கையில் பேஸ்பால் பேட்களை உடைக்கும் காட்சிகள் வருகின்றன. அதில் ஜெர்மனியைச் சேர்ந்த முஹ்மது கஹ்ரிமானோவிக் ஒரு நிமிடத்தில் தன்னுடைய கை உதவியுடன் 68 பேஸ்பால் பேட்களை அசத்தலாக உடைத்தார். அத்துடன் அவர் கின்னஸ் உலக சாதனைப் படைத்தார். இந்தச் சாதனையை அவர் கடந்த பிப்ரவரி மாதம் இத்தாலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்து முடித்தார்.
These baseball bats didn't stand a chance 💪 pic.twitter.com/CgiJlhuyyo
— Guinness World Records (@GWR) August 30, 2022
அதைத் தொடர்ந்து இந்த வீடியோவில் உடம்பின் பின்பகுதியை வைத்து பேஸ்பால் பேட்டை உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த மாட் டாப்சன் ஒரு நிமிடத்தில் தன்னுடைய பின்பகுதியை வைத்து சுமார் 19 பேஸ்பால் பேட்களை உடைத்து அசத்தினார். இதன்மூலம் உடம்பு பின்பகுதியை வைத்து அதிக பேஸ்பால் பேட்களை உடைத்த நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார். இந்தச் சாதனையை அவர் 2013ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு வீடியோவும் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டு கின்னஸ் சாதனை பக்கம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த இருவர்கள், ஓடும் காரின் டயரை மாற்றி, கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர். ஓடும் காரிலிருந்த டயரை, சரியாக 1 நிமிடம் 17 விநாடிகளில் மாற்றி இச்சாதனையை இருவரும் படைத்துள்ளனர்.
ஓடும் காரில் 1 நிமிடத்தில் டயர் மாற்றம்.. கின்னஸ் சாதனை
கின்னஸ் உலக சாதனைப் போட்டியில், கார் ஓட்டுநரான மானுவல் ஜோல்டன் மற்றும் டயரை மாற்றுவரான கியான்லுகா ஃபோல்கோ ஆகியோர் கின்னஸ் சாதனை நினைத்தனர். அதையடுத்து 1 நிமிடம் 17 விநாடிகளில் காரில் சக்கரத்தை அதிவேகமாக மாற்றிய இச்சாதனை படைத்தனர். இவர்கள் படைத்த சாதனை வீடியோ வேகமாக வைரலானது. அந்த வீடியோவில், மானுவல் காரை ஒரு சாய்வு பாதையில் ஓட்டி, சாமர்த்தியமாக இரண்டு சக்கரங்களில் ஓட்டுகிறார். அப்போது கார் நகரும் போது, ஜன்னலுக்கு வெளியே தொங்கியபடி, காரின் டயரை கியான்லுகா திறமையாக விரைவாக மாற்றினார்.
மேலும் படிக்க:குழியில் வாழ்வார்.. அமேசான் காடுகளின் கடைசி மனிதர் மரணம்! முடிந்ததா பூர்வ குடிகளின் இனம்?