இலங்கையில் தொடரும் பதட்டம்! பத்திரிகையாளர்களை கொடூரமாக தாக்கும் பாதுகாப்புப் படை - ஷாக் வீடியோ!
போராட்டத்தை செய்தியாக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Four News 1st journalists attacked by security forces#lka #SriLanka #SLnews #News1st #ProtestLK #CrisisLK #EconomyLK #GotaGoGama #Aragalaya pic.twitter.com/kjJO2KwFaq
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) July 9, 2022
இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இன்னும் ஒருநாள் மட்டுமே எரிபொருள் மீதமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
முன்னதாக அங்கு எரிபொருள் பிரச்னையை சமாளிக்க இந்தியா 4 முறை பெட்ரோல், டீசல் அனுப்பியிருந்தது. அதேசமயம் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் நடந்தே பல கிலோமீட்டர் தூரம் சென்று வருகின்றனர். ஆனாலும் மக்கள் போராட்டம் அங்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதனிடையே இன்று காலை முதல் அந்த நாட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிபர் மாளிகையை ஒரே நேரத்தில் ஆயிரக்ணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் காவல்துறையினராலும், ராணுவத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மக்களின் போராட்டத்திற்கு அச்சமடைந்த கோத்தபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையை விட்டு தப்பிஓடினார்.
அனைத்து கட்சி அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ரணில் அறிவித்துள்ளார். இருப்பினும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமும் காவல்துறையினரும் திணறி வருகின்றனர்.
இச்சூழலில், போராட்டத்தை செய்தியாக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்