சூரியனை விட 25 மடங்கு பெரியது - கருந்துளை தொடர்பான ஆச்சரிய தகவல் சொன்ன ஆய்வாளர்கள்!
செயலிழந்துள்ள முதல் பெரிய கருந்துளையை ( (BLACK HOLE) விஞ்ஞானிகள் குழு திங்கள்கிழமை அன்று கண்டுபிடித்துள்ளனர்.
செயலிழந்துள்ள முதல் பெரிய கருந்துகளையை ( (BLACK HOLE) விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். விண்மீன் மண்டலத்திற்கு அருகே நட்சத்திரத்தை இந்த கருந்துகளை சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. பெரிய மாகெல்லானிக் மேகம், அதாவது செயற்கைக்கோள்கள் சுற்றி வரும் அண்டத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த கருந்துளையானது பால் வழியிலிருந்து வெளியே கண்டறியப்பட்ட முதல் கருந்துளை என வானியல் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் வானியல் இயற்பியலாளர் டோமர் ஷெனார் கூறுகையில், "சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ள இந்த கருந்துளை, குவிக்கப்பட்டுள்ள வைக்கோல் குவியலில் ஊசியின் அடி நுனியில் வைக்கப்பட்ட ஒரு புள்ளியை போல் தெரிகிறது" என்றார்.
இதுகுறித்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ள குழுவின் தலைமை விஞ்ஞானியான ஷெனார், "நமது சூரியனை விட 25 மடங்கு நிறை கொண்ட மிகப் பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளோம். அது நம்மால் பார்க்க முடியாக ஒன்றைச் சுற்றி வருகிறது. இதுபோன்ற அமைப்புகளை நாங்கள் இதற்கு முன்பு கண்டறிந்ததில்லை. கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிலர் தகவல் வெளியிட்டனர். ஆனால் அவை அனைத்தும் விஞ்ஞானிகளால் மறுக்கப்பட்டுள்ளன.
உண்மையில் பைனரி கருந்துளையாக மாறக்கூடிய ஒன்றுக்காக குழு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரு வெடிப்பின் போது நட்சத்திரங்களை விழுங்கும் இரண்டு கருந்துளைகள் அதற்கு பிறகு ஒன்றையொன்று சுற்று வரும்.
பொதுவாக, எக்ஸ்ரே கதிர்வீச்சு இந்த வகையான கருந்துளைகளைக் கண்டறியும். ஆனால் இந்த கருந்துளைகள் எக்ஸ்ரே கதிர்களை வெளியிடாததால் செயலற்ற ஒன்றாக இவை கருதப்படுகிறது.
கருந்துளை என்பது மிகபெரிய அண்ட வெளியில் மற்றும் வின்வெளியில் காணப்படும் சக்தி வாய்ந்த கண்ணுக்கு தெரியாத வெற்றிடமாகும். இந்த கருந்துளை அதிக ஈர்ப்பு விசை கொண்டது எந்த அளவுக்கு என்றால் இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைகூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.
இது ஒரு சூரியனையே தனக்குள் ஈர்த்து கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த கருந்துளையானது அதனுள் சென்ற சிறிய ஒளியை கூட வெளிய வர விடாது அந்த அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்தது. நமது பால்வெளியின் அருகில் உள்ள ஒரு கருந்துளை நமது சூரியனை விட 40 லட்ச மடங்கு பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கருந்துளை ஒவ்வொரு பால்வெளி அண்டத்திலும் காணப்படும். இந்த கருந்துளை பற்றிய அனைத்து கருத்துகளும் அதனை சுற்றியுள்ள பொருள்களை வைத்தே வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை கருந்துளைக்குள் எவரும் சென்றதில்லை.
கருந்துளை ஒளியை கூட வெளியேற விடாமல் ஈர்த்துக் கொள்ளும் சக்தி படைத்ததால், அதனை நம்மால் பார்க்க இயலாது. ஆனால், விண்வெளியில் உள்ள தொலைநோக்கி மூலம் கருந்துளை எங்கு இருக்கிறது என்பதை அறியலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்