(Source: ECI/ABP News/ABP Majha)
இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்தை அடைந்த சீனாவின் உளவுக்கப்பல்.. என்ன நடக்கிறது?
ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் வரும் 22ம் திகதி வரை நிறுத்தப்பட்டிருக்கும் சீனாவின் ஆய்வு கப்பல்.
சர்ச்சைக்குரிய சீனாவிற்கு சொந்தமான யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இன்று முதல் 22 ஆம் திகதி வரை இந்த கப்பல் நங்கூரமிட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சீனக் கப்பல் பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.யுவான் வாங் 5 தற்போது சீன இராணுவத்தின் (பிஎல்ஏ) மூலோபாய ஆதரவுப் படையின் செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் நான்கு கப்பல்களில் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு இலங்கை குத்தகைக்கு வழங்கிய ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான உத்தேச விஜயம், புதுதில்லியில் குழப்பம் ஏற்பட்டது.
எனினும் இலங்கையில் சீனா கப்பல் தங்கி இருக்கும் காலங்களில் எந்த ஒரு ஆய்வு நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என சீனா உறுதியளித்ததின் அடிப்படையிலேயே ஹம்பாந்தோட்டை துறை முகத்துக்கு வர அனுமதி வழங்கியதாக இலங்கை அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சீனாவில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட ஆய்வுக் கப்பல், இந்திய கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு அச்சம் காரணமாக இலங்கை அரசு அந்த பயணத்தை பிற்போட கோரியதால் சர்வதேச கடலில் அக்கப்பல் நிறுத்தப்பட்டது.கடந்த 11ஆம் தேதி இலங்கைக்கு வந்த சீனாவின் ஆய்வுக் கப்பல், இலங்கை அரசு அக்கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் சீனா மற்றும் இலங்கைக் கிடையில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற பின்பு அக்கப்பல் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.சீன ஆய்வுக்கு கப்பலின் இலங்கை வருகை குறித்து ,இந்தியா தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பெருங்கடல் பகுதிக்கு இந்த கப்பல் வருகையால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், யுவான் வாங் 5 கப்பல் இலங்கை வருவது குறித்து சீனா கருத்து தெரிவித்தது.
சட்டப்பூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் வெளி தரப்பினர் தலையிட மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தது.
பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுத்த நிலையில், யுவான் வாங் 5 கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டது. இதேவேளை சீனாவின் இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பெலஸ்டி ஏவுகணை மற்றும் செய்திமதிப்புகளை ஏவுதல், கண்காணித்தல் ஆகிய வசதிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் காரணமாகவே பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்புவதாக கூறப்படுகிறது. யுவான் வாங்-5 என்ற சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை வருவதற்கு, கடந்த மாதம் 12 ஆம் தேதி கொழும்பில் சீன தூதரகத்திற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது.
சீன கண்காணிப்பு கப்பல் இன்று இலங்கை வந்துள்ள நிலையில் நேற்று இந்தியாவால் கடல்சார் கண்காணிப்பு டார்னியர் விமானம் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இதன் நடவடிக்கைகள் குறித்து இந்தியா அவதானத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.