மேலும் அறிய

China Covid - 19: சீனாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா.. மீண்டும் அமலுக்கு வரும் சீரோ கோவிட் பாலிஸி

சீனாவின் தினசரி கோவிட் எண்ணிக்கை 30,000 க்கும் அதிகமாக பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சீனாவின் தினசரி கோவிட் எண்ணிக்கை 30,000 க்கும் அதிகமாக பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது

நோய்த்தொற்றின் தொடக்கத்திலிருந்து சீனாவின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்னாப் லாக்டவுன்கள் (snap lockdown), கொரோனா தொற்று பரிசோதனை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் (travel restriction) மூலம் தொற்று பரவுதலை தடுக்க சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நகரங்களில் பூங்காங்கள், ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட சாயோங் மாவட்டத்தில் முழுமையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 31,454 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் 27,517 பேருக்கு அறிகுறிகள் இல்லை என தேசிய சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை ( 1.4 பில்லியனுடன்) ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை சிறியது. ஆனால் கடுமையான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் கீழ் (zero covid policy),குறைந்த பாதிப்பு இருந்தாலும் அந்த நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்படும்.

பெய்ஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அலுவல்பூர்வ எண்ணிக்கை 5,229 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 2 கோடியே 10 லட்சம் பேர் வசிக்கும் பெய்ஜிங் நகரத்தின் சில பகுதிகள் மீண்டும் பொது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளன

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். கடந்த 2019ம் ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டபின், தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பரவல் 1000 பேருக்கு மேல் ஏற்படுவது இதுதான் முதல்முறையாகும்.   மெகாசிட்டி ஷாங்காய் ஏப்ரல் மாதம் 29,390 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்தது.

தற்போது அந்த எண்ணிக்கையை கடந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள்   அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்வது கூட கடினமாக உள்ளது. சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவது அரசுக்கும், மக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப்பின் சீனாவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 28 ஆயிரம் பேருக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.   

பெய்ஜிங் நகரத்திற்கு வெளியூரில் இருந்து வருபவர்கள் அவர்கள் வந்த நாளிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் அனுமதிக்கும் வரை அவர்கள் பொதுவெளியில் நடமாடக்கூடாது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெய்ஜிங் மட்டுமல்லாமல் பல லட்சம் மக்கள் வசிக்கும் சீனாவின் பிற பகுதிகளிலும் அதிகாரிகளால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது.

முன் எப்போதும் இல்லாத  வகையில் 2020-ஆம் ஆண்டுக்கு பின் கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்துள்ளது. சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 500  நபர்களுக்கு கீழ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 6, 2020 ஆண்டு பின் ஏற்படும் குறைந்த  பாதிப்பாகும். 

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடங்கி மூன்று  ஆண்டுகள்  ஆகிய நிலையில் மக்களுக்கு இன்றளவும் பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல நாட்டு  நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது. கொரோனா, டெல்டா கொரோனா, ஒமிக்ரோன் அதனை தொடர்ந்து தற்போது NeocoV  என மாற்றம் அடைந்து மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget