மணிக்கு 10,000 கிமீ வேகத்தில் வந்த விண்கல்.. நகர பகுதியில் விழுந்ததால் அதிர்ச்சி - வீடியோ!
வானத்திலிருந்து வந்த விண்கல் சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் இரவு நேரத்தில் விழுந்தது கேமராவில் பதிவாகியுள்ளது.
வானத்திலிருந்து வந்த விண்கல் சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் இரவு நேரத்தில் விழுந்தது கேமராவில் பதிவாகியுள்ளது. ஜூலை 7 அன்று இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. வானத்திலிருந்து வந்த அந்த சிறிய பாறை பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் எரிய தொடங்கியதாக கான்செப்சியன் பல்கலைக்கழக அறிஞர்கள் உறுதிப்படுத்தினர். இதுகுறித்து பிபிசியும் செய்தி வெளியிட்டுள்ளது.
Meteor seen hitting the Earth's atmosphere in Chile.  pic.twitter.com/ZVEmP4qZeQ
— Joshua Jered (@Joshuajered) July 8, 2022
வானத்திலிருந்து வந்த விண்கல் சாண்டியாகோ நகரை நெருங்கியவுடன் பெரிய அளிவில் வட்ட வடிவிலான ஒலியை ஏற்படுத்தியது. விண்கல் விழுந்ததில் அது பல பகுதிகளில் சிதறியதாக அலுவலர்கள் கூறியுள்ளனர்.
வளிமண்டலத்தைக் கடந்தபோது விண்கற்கள் இடி இடிப்பது போன்ற ஒலியை ஏற்படுத்தியதாக நகரவாசிகள் கூறியுள்ளனர். சாண்டியாகோவில் விழுந்த விண்கல் "T12.cl" என்று அழைக்கப்படுவதாக சிலி வானியல் அறக்கட்டளையைச் சேர்ந்த வானியலாளர் ஜுவான் கார்லோஸ் பீமின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விவரிக்கையில், "வளிமண்டலத்தில் நுழையும் போது அந்த கல் காற்றுடன் ஏற்பட்ட உராய்வு காரணமாக, எரிய தொடங்குகிறது. மணிக்கு 10,000 கிலோமீட்டர் வேகத்தில் அந்த கல் வானிலிருந்து வந்தது.
Meteor over Chile! pic.twitter.com/JXhP9fLlYy
— AstroHardin ♱ (@AstroHardin) December 14, 2019
சிலியில் விண்கல் விழுந்த அதே நாளில் நியூசிலாந்தின் வெலிங்டனில் எரியும் விண்கல் போன்ற தீப்பந்தம் வானத்தில் பறந்து வந்து விழுந்தது. அப்போது உரத்த சத்தம் கேட்டதாகவும், கடந்து செல்லும்போது பெரிய ஒளி வடிவை ஏற்படுத்தியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வளிமண்டலத்திலிருந்து வரும் விண்கல் நகர்ப்புற பகுதியில் அதிக வேகத்தில் விழுவது அரிதான நிகழ்வு என கேன்டர்பரி பல்கலைக்கழகத்தின் மவுண்ட் ஜான் ஆய்வகத்தில் வானியலாளர் ஆலன் கில்மோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இது மிகவும் பிரகாசமாக ஒளிர்வதால் அது மிகப் பெரிய பொருளாக இருந்திருக்க வேண்டும். பூமியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் விண்கல் வந்திருப்பதை அது எழுப்பிய சத்தம் உறுதிபடுத்துகிறது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்