Ship Capsized: ஜப்பானின் கிழக்கு சீன கடலில் கப்பல் மூழ்கி 8 பேர் பரிதாப பலி..! தேடுதல் வேட்டை தீவிரம்
ஜப்பானின் கிழக்கு சீன கடலில் கப்பல் மூழ்கி 8 பேர் பலியாகியுள்ளனர்.
ஜப்பானின் கிழக்கு சீன கடலில் கப்பல் மூழ்கி 8 பேர் பலியாகியுள்ளனர். ஜப்பானின் நாகசாகி மாகாணம் அருகே உள்ள கிழக்கு சீன கடலில் கப்பல் மூழ்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 28 பேருடன் சென்ற கப்பலில் 8 பேர் பலியாகியுள்ளனர். மீட்புப் பணியின் போது 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
Eight dead after ship sinks between Japan and South Korea
— ANI Digital (@ani_digital) January 26, 2023
Read @ANI Story | https://t.co/rfxURkq5W5#Japan #Ship #SouthKorea pic.twitter.com/kiok19YyJw
கடந்த புதன் கிழமை அதாவது ஜனவரி 25ஆம் தேதி இரவு சுமார் 11 மணி 15 நிமிடங்கள் இருக்கும் போது, கப்பலில் இருந்து அபாய சமிஞ்கை எழுப்பபட்டுள்ளது. அதன் பின்னர் கப்பல் இருந்த நாகசாகி மாகாணத்தின் கிழக்கு சீன கடலுக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து 14 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும், 8 பேர் இறந்த நிலையில் அவர்களது உடலையும் மீட்டுள்ளனர். சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தினால், இறந்தவர்கள் சீனா மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இறந்தவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட நாட்டினுடைய தூதகரகங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.