கனடா: பட் பட்டென உடையும் கண்ணாடிகள்… கார்களை சேதப்படுத்திய அபாயகரமான ஆலங்கட்டி மழை… பலர் காயம்!
எல்லா கட்டிகளும் திராட்சை பழ அளவில் இருந்து கிரிக்கெட் பந்து அளவு வரை இருந்ததாகவும், அரிதாக ஒரு மூன்று இடங்களில் பேஸ்பால் அளவிலான ஆலங்கட்டி கற்கள் விழுந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சோ… என பாட்டு கேட்டு குதூகலம் அடையும் நம்மை 'அய்யோடா…' என சொல்ல வைத்திருக்கிறது கனடாவில் அதே ஆலங்கட்டி மழையால் நடந்த சம்பவம் ஒன்று.
பலமான ஆலங்கட்டி மழை
கனடாவில் கடந்த திங்கட்கிழமை பெய்த பலமான ஆலங்கட்டி மழை, கார் கண்ணாடிகள் உடைத்து பயணிகளை அதிர வைத்துள்ளது. கனடாவின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவை சூறாவளி தாக்கியதை அடுத்து இந்த பயங்கரமான ஆலங்கட்டி மழை ஏற்பட்டது என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Got stuck in the huge hail storm at the bottom of Antler Hill between #reddeer and #Innisfail. Thankfully it’s just the vehicle that got damaged. Crazy stuff to experience though. #abstorm pic.twitter.com/3hLnJDhEK7
— Matt Berry (@MattBear3135) August 2, 2022
I can’t even. I panic took this without putting it in the ruler properly 😂. Tennis balls when it was NW of Markerville 17:40. They’re still coming down. Stay clear. #abstorm pic.twitter.com/TpGJCUD6ZM
— Mhairi (@Mahairy93) August 2, 2022
காவல்துறை தகவல்
இந்த புயல் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும், சுமார் 34 வாகனங்கள் இதனால் சேதமடைந்ததாகவும் தி ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) தெரிவித்தனர். பலருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்பால் பந்து அளவுக்கு…
எல்லா கட்டிகளும் திராட்சை பழ அளவில் இருந்து கிரிக்கெட் பந்து அளவு வரை இருந்ததாகவும், அரிதாக ஒரு மூன்று இடங்களில் பேஸ்பால் அளவிலான ஆலங்கட்டி கற்கள் விழுந்து கொஞ்சம் பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#abstorm last night 5km south of gasoline alley, horrible 17 minutes pic.twitter.com/15HBfcB7cp
— Gibran Marquez (@GibranMarquez7) August 2, 2022
Recap of yesterday's mission across #ABwx for the @westernuNHP:
— NHP Field Project 🇨🇦 (@NHP_field) August 2, 2022
• Documented a long-track supercell
• Collected 7 bags of baseball to grapefruit-sized hail
• Deployed 4 probes ahead of hailcores (2 with video) and all successfully hit
• Measured and bagged a 106mm hailstone pic.twitter.com/j2Fxs2uUHQ
ட்விட்டரில் பகிர்ந்த பயணிகள்
புயலைத் தொடர்ந்து பலர் தங்கள் கார்களின் மேல் Aஆலங்கட்டி கற்கள் விழுந்து சேதமடைந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். பயமுறுத்தும் 17 நிமிடங்கள் என்று கேப்ஷன் இட்டு காரின் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஒருவர் கேஷுவலக விடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறார். முன் சீட்டில் அமர்ந்திருக்கும் இருவரும் பயத்தில் கைகளால் தலையை பாதுகாத்துக் கொண்டு அமர்ந்துள்ளதை வீடியோவில் காண முடிகிறது. காலநிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற அபாயகரமான ஆலங்கட்டி மழைகளை வருங்காலத்தில் இன்னும் நிறைய பார்க்க நேரிடலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்