Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
அமெரிக்க பாப் நட்சத்திரம் கேட்டி பெர்ரி மற்றும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் தங்கள் உறவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அமெரிக்க பாப் நட்சத்திரமான கேட்டி பெர்ரி, தனது தனிப்பட்ட உறவு குறித்த யூகங்களுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான தனது உறவு நட்பைத் தாண்டிச் சென்றது என்பதை தெளிவுபடுத்தும் வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இருவரும் மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை இந்தப் பதிவுகள் காட்டுகின்றன. இது அவர்களின் உறவு குறித்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டியள்ளது.
ஜப்பானுக்கு ஜாலி டூர் போன ட்ரூடோ-கேட்டி ஜோடி
கேட்டி பெர்ரி தற்போது ஜப்பான் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்த நேரத்தில், ட்ரூடோவுடன் பல மறக்கமுடியாத தருணங்களின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டார். ஒரு புகைப்படத்தில், இருவரும் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுப்பதைக் காணலாம். அதே நேரத்தில், அதில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், அவர்கள் ஒன்றாக சாப்பிட்டு அரட்டை அடிப்பதைக் காணலாம். பெர்ரி தனது பதிவிற்கு, "டோக்கியோ சுற்றுப்பயண நேரங்கள் மற்றும் இன்னும் பல..." என்று தலைப்பிட்டுள்ளார். அதாவது, "டோக்கியோவில் சுற்றுப்பயணத்தின் போது பல சிறப்பு தருணங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
ட்ரூடோ-கேட்டி உறவை உறுதி செய்த ஜப்பான் முன்னாள் பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி ஜோடி குறித்த தகவலை, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் பதிவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ தனது துணையுடன் ஜப்பானுக்கு சென்று, அவருடன் மதிய உணவு சாப்பிட்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிஷிடாவின் பதிவு, உலகளவில் அவர்களின் உறவு குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
カナダのトルドー前首相(@JustinTrudeau)がパートナーと来日され、私たち夫妻と昼食をご一緒しました。
— 岸田文雄 (@kishida230) December 4, 2025
総理時代には首相同士何度もお会いし、カナダ訪問時には「日加アクションプラン」の策定など、二国間関係強化に共に汗をかいた仲です。
こうして交友を続けられていることを嬉しく思います。 pic.twitter.com/t9RkbMyip5
உறவு எப்போது தொடங்கியது.?
கடந்த அக்டோபர் மாதத்தில் பாரிஸில் நடந்த பெர்ரியின் 41-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ட்ரூடோவும் கேட்டி பெர்ரியும் முதன்முதலில் பொதுவில் ஒன்றாக தோன்றினர். இருப்பினும், அவர்கள் இதற்கு முன்பு, கடந்த ஜூலை மாதத்தில் கனடாவில் தங்கள் செல்ல நாய்களை நடை பயணமாகக் கொண்டு செல்வதைக் காண முடிந்தது.
மேலும், மாண்ட்ரீலில் சந்தித்த பிறகு அவர்களின் உறவு மலர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றிலிருந்து அவர்கள் டேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளனர். அதோடு, பல தனிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர்.





















