மேலும் அறிய

Trump Iran War: ”48 மணி நேரம் போரை ஸ்டாப் பண்ணிக்கலாம்” - அமெரிக்கா கோரிக்கை, ”நோ” சொன்ன ஈரான், ஏன்?

Trump Iran War: அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்த பரிந்துரையை, ஈரான் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Trump Iran War: அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தாக்கப்பட்ட சூழலில், போர் நிறுத்தம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர் நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்

அமெரிக்காவின் F-15 மற்றும் A-10 ஆகிய இரண்டு போர் விமானங்களை நேற்று அடுத்தடுத்து வெற்றிகரமாக ஈரான் தாக்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் தப்பித்த இருவரில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடும் பணியில் ஈடுபட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும் தாக்குதலுக்கி ஆளாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா முன்வைத்த 48 மணி நேர போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்த பிறகே, தாக்குதல்கள் தீவிரமடைந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், உரிய இழப்பீடுகள் பெறாமல் போரை நிறுத்தப்போவதில்லை என்ற முடிவில் ஈரான் விடாப்படியாக இருப்பதை உணர முடிகிறது. கடந்த புதன்கிழமை அன்று பெயர் வெளியாகாத குறிப்பிட்ட நாட்டின் மூலம், இடைக்கால போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை அமெரிக்கா வழங்கியதாம்.

அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்கள்:

அமெரிக்கா - ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மும்முரம் காட்டிய நிலையில், அவர்கள் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்பமாட்டோம் என தெஹ்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் 48 மணி நேர போர் நிறுத்தம் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று மாலை ஹார்மஸ் ஜலசந்தி அருகே, அமெரிக்காவின் A-10 தன்டர்போல்ட் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இந்த நிகழ்வுக்கு முன்னதாக அமெரிக்க ராணுவத்தின் F-15 ரக போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை மீட்க சென்ற UH-60 ப்ளாக் ஹாவ்க் ரக ஹெலிகாப்டரும் தாக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட விமானி

ஒரே ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய A-10 தன்டர்போல்ட் விமானம் தாக்கப்பட்டதுமே அதிலிருந்து விமானி பாராசூட் மூலம் உடனடியாக வெளியேறினர். அவர் பத்திரமாக மீட்கப்பட்டு அமெரிக்கா கட்டுப்பாட்டு தளத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த A-10 தன்டர்போல்ட் விமானம் தாக்குதலுக்கு உள்ளானதும் குவைத் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. 

தேடப்பட்டு வரும் விமானி

F-15 ரக விமானம் எங்கே விழுந்துள்ளது என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தெஹ்ரானுக்குத் தெற்கே சுமார் 470 கி.மீ தொலைவில் உள்ள குசெஸ்தான் மாகாணத்தில், கரூன் ஆற்றின் மீதான ஒரு பாலத்தில் விழுந்து இருக்கலாமென கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடங்கிய பிறகு, தெஹ்ரானின் வான்பரப்பில் ஒரு அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அதேநேரம், பாராசூட் மூலம் அந்த விமானத்தில் இருந்து தப்பிய அமெரிக்க வீரரை உயிருடனோ அல்லது சடலாமாக ஒப்படைத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஆனால், அவரை உயிருடன் பிடித்தால் எந்தவிதமான மரியாதைக்குறைவான செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவரை விரைந்து கண்டுபிடிக்க அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய ஈரான் ராணுவங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Embed widget