மேலும் அறிய

'இட்லி மீதான காதல்', இம்மாத இறுதியில் வெளியாகும் கமலா ஹாரிஸ் குறித்த புத்தகத்தில் சுவாரஸ்யம்!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்த புத்தகம் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. அதில் அவரது வாழ்க்கை வரலாறும் தனிப்பட்ட விருப்புகளும் குறித்த செய்திகள் இடைபெற்றுள்ளன என்று கூறப்படுகின்றன.

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தாய் ஷியாமலா கோபாலன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம். கமலா ஹாரிஸின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர். கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றப்பின், அவரின் தாயாரால் வளர்கப்பட்ட கமலா ஹாரிஸ், இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்துள்ளார். கமலா ஹாரிஸின் தாய் தன்னை கருப்பின கலாசாரத்திற்கு மாற்றிக் கொண்டு தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்துள்ளார். “நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்” என்று அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதுமே அவரது உறவினர்கள் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். பதவியேற்பையொட்டி, கமலா ஹாரிஸ் தாயாரின் சொந்த ஊரான துளசேந்திபுரத்தில் கிராமத்தினர் பூஜை செய்து, பட்டாசு வெடித்து, விளக்கு ஏற்றி கொண்டாடினர்.

இட்லி மீதான காதல்', இம்மாத இறுதியில் வெளியாகும் கமலா ஹாரிஸ் குறித்த புத்தகத்தில் சுவாரஸ்யம்!

இந்த நிலையில், அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவுக்கு வரும்படி இருவருக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அப்போது தமிழகத்துக்கு வரும் அவர், தனது சொந்த ஊருக்கும் செல்லவுள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், கமலா ஹாரிசின் வாழ்க்கையை விளக்கும் வகையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரபல பத்திரிகையாளர் சித்தானந்த ராஜ்கட்டா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மொத்தம், 300 பக்கங்கள் உடைய இந்த புத்தகம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

இட்லி மீதான காதல்', இம்மாத இறுதியில் வெளியாகும் கமலா ஹாரிஸ் குறித்த புத்தகத்தில் சுவாரஸ்யம்!

கமலா ஹாரிசின் தாய் ஷியாமளா கோபாலன் தமிழகத்தில் இருந்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார், அங்கு உடன் படித்த ஆப்ரிக்காவைச் சேர்ந்த டொனால்டு ஹாரிசை திருமணம் செய்தார். அதே காலகட்டத்தில் ராஜ்கட்டாவின் தந்தையும் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றார். ஷியாமளா கோபாலனின் அமெரிக்க வாழ்க்கையில் துவங்கி, கமலா ஹாரிசின் சிறு வயது அனுபவங்கள், அவருடைய விருப்பங்கள் உள்ளிட்டவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. கமலா ஹாரிஸ் பிறந்த போது அவரது பிறப்பு சான்றிதழில், முதலில் கமலா அய்யர் ஹாரிஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின் அது கமலா தேவி ஹாரிஸ் என மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவலும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலாவின் சமையல் விருப்பம், இட்லி, தோசை மீதான காதல் போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அரசியலில் வெற்றி பெற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், போட்டிகள் குறித்து கமலா ஹாரிஸ் கூறியுள்ளவையும் இடம்பெற்றுள்ளது.

தலைப்பு செய்திகள்

Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Embed widget