மேலும் அறிய

திமிங்கலத்தின் மீது மோதி கவிழ்ந்த படகு.... 5 பேர் பலி... 6 பேர் மீட்பு!

திமிங்கலத்தைப் பார்க்க மக்கள் ஒருபுறமாக விரைந்ததால் படகு நிலைதடுமாறி மூழ்கியிருக்குமா என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நியூசிலாந்து நாட்டில் கடலில் சென்ற படகு திமிங்கலம் போன்ற பொருள் ஒன்றின் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

நியூசிலாந்து நாட்டில் கைகவுரா, கூஸ் பே பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இப்பகுதியில் நேற்று (செப்.10) நியூசிலாந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பறவை ஆர்வலர்கள் 11 பேர் சிறிய ரக படகு ஒன்றை ஏற்பாடு செய்து கடலில் பயணித்துள்ளனர்.

 

8.5 மீட்டர் (அ) 28 அடி நீளம் கொண்ட படகில் இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், படகு திடீரென கடலில் நீந்திக்கொண்டிருந்த திமிங்கலம் மீது மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதில், படகு நிலைகுலைந்து கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  படகில் பயணித்த 11 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கடலோர காவல்படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 

தொடர்ந்து கடலில் தத்தளித்தவர்களில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் மீட்புப்படையினர் வருவதற்குள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் ஐந்து பேரும் அந்நாட்டின் பிரபல் புகைப்பட சமூகம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், முன்னதாக அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

 

திமிங்கலம் மீது மோதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நிலையில் விபத்துக்கு திமிங்கலம் மோதியது தான் காரணமா அல்லது திமிங்கலத்தைப் பார்க்க மக்கள் ஒருபுறம் விரைந்ததால் படகு நிலைதடுமாறி மூழ்கியிருக்குமா என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
"வாய் திறப்பீர்களா டம்மி டாடி?" திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி; மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
MK Stalin:
MK Stalin: "அணையைக் கூட திறக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் வாயை யாராலும் திறக்க முடியவில்லை"! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
"ஆதார் கார்டு முகவரியால் அம்பலமான வழக்கறிஞரின் லீலைகள்" பெண்ணிடம் ரூ.21 லட்சம் அபேஸ்
Embed widget