மேலும் அறிய
Advertisement
Gustavo Arnal: தொழிலில் நஷ்டம்.. பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள்.. பிரபல நிறுவனத்தின் நிதி அதிகாரி தற்கொலை..
Gustavo Arnal: தொழிலில் நஷ்டம்.. பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள்.. பிரபல நிறுவனத்தின் நிதி அதிகாரி தற்கொலை..
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜெங்கா டவரில் (New York's Tribeca skyscraper known as the "Jenga" tower) இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர காவல் துறையினர் அங்கு சென்று அவரின் உடலை மீட்டனர். நீயூயார்க் நகர காவல் துறையின் தகவலின்படி, உயிரிழந்தவர் பிரபல நிறுவனத்தின் தொழிலதிபர் குஸ்டாவோ அர்னல் (Gustavo Arnal) என்று தெரிய வந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பெட் அண்ட் பியாண்ட் (Bed Bath & Beyond) என்ற நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer)
Manhattan பகுதியில் உள்ள கெங்கா டவரின் 18-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
Bed Bath & Beyond’s CFO fell to his death from New York's Tribeca skyscraper on Friday afternoon, police said, days after the struggling retailer announced it was closing stores and laying off workers https://t.co/bEFMvgqPDG pic.twitter.com/qQ8vxNBLYB
— Reuters (@Reuters) September 5, 2022
பெட் அண்ட் பியாண்ட் நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்ததாகவும், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்நிறுவனத்தின் 150 கிளைகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. 20 சதவீத பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கும் முடிவு செய்துள்ளாதாக அறிவித்தது அந்நிறுவனம். இந்த அறிவிப்பு வெளிவந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, குஸ்டாவோ அர்னல் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், நிறுவனத்தின் விற்பனை 25 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதற்கடுத்த மாதங்களிலும் விற்பனை அதிகரிக்கவில்லை. கடந்த வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. சுமார் 42,000 க்கும் மேற்பட்ட பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குகள் விற்பனைக்கு முன்பு, இந்நிறுவனத்தில் 267,896 பங்குகள் குஸ்டாவோ அர்னலிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு 5.6 மில்லியன் டாலர்கள் ஆகும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா தொற்றால் பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்த நிலையில், குஸ்டாவோ அர்னல் பெட் அண்ட் பியாண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு, குஸ்டாவோ அர்னல் லண்டனைச் சேர்ந்த காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார்.
How do you “ fall” from an 18th story window? You either jump or get pushed. There is no falling $BBBY #GustavoArnal
— The Dutchman_ (@deDutchman_) September 5, 2022
குஸ்டாவோ அர்னல் மரணம் குறித்து நியூயார்க் காவல் துறையினர் எந்த தகவலும் அளிக்கவில்லை. இதுவரை மரணத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் கூறப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion