America Indian Student: 30 நாட்களில் 4 இந்திய மாணவர்கள் மரணம் - அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
America Indian Student: அமெரிக்காவில் பயின்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
America Indian Student: அமெரிக்காவில் பயின்று வந்த ஸ்ரேயாஷ் ரெட்டி எனும் இந்திய மாணவர், அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
இந்திய மாணவர் கொலை:
ஓஹியோவில் உள்ள லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் படித்து வந்த, ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வேதனை தெரிவித்ததுடன், பெனிகரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ஓஹியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரியின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. இந்த கட்டத்தில், எந்தவொரு தவறான சந்தேகத்தையும் முன்னெடுக்க முடியாது. துணைத் தூதரகம் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதுடன் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளது.
Deeply saddened by the unfortunate demise of Mr. Shreyas Reddy Benigeri, a student of Indian origin in Ohio. Police investigation is underway. At this stage, foul play is not suspected.
— India in New York (@IndiainNewYork) February 1, 2024
The Consulate continues to remain in touch with the family and is extending all possible…
தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்:
- பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா கடந்த திங்களன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை முதல் ஆச்சார்யாவை காணவில்லை என கூறப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அது ஆச்சார்யாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.
- ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி ஜார்ஜியாவின் லித்தோனியாவில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார். அதேநேரம், அங்குள்ள கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீடற்ற ஜூலியன் ஃபாக்னர் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்தஉணவு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதியன்று 25 வயதான பால்க்னருக்கு இலவச உணவு வழங்க மறுத்ததாகவும், இதனால் அவர் விவேக் சைனியை அடித்து கொன்றதாகவும் காவல்துற தரப்பு தெரிவிக்கிறது
- இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் (UIUC) பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 18 வயதான அகுல் தவான் ஜனவரி மாத தொடக்கத்தில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் ஹைபோதெர்மியாவால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகாரளித்த பிறகு பல்கலைக்கழகத்தின் காவல்துறை அலட்சியம் மற்றும் செயலற்ற தன்மையைக் குற்றம் சாட்டி தவானின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள், அங்கு தங்கி படிக்கும் நம் நாட்டு மாணவர்கள் இடையே ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.