ரஷ்யாவில் திடீரென தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் - பயணிகள் அதிர்ச்சி - காரணம் என்ன?
டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷியாவில் அவசரமாக தரையிறக்கபட்டதால் பயணிகள் அதிர்ச்சி..
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் டெல்லியின் முதன்மை விமான நிலையமாகும், இது அனைத்து முக்கிய இடங்களுக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்குகிறது. டெல்லி சர்வதேச விமான நிலையம் அனைத்து முக்கிய விமான நிறுவனங்களின் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான ஒரு முக்கிய விமான நிலையமாகும்.
எப்போதும் இந்த விமான நிலையம் பரபரப்பாகவே காணப்படும். உள்நாடு மற்றும் வெளிநாடு சர்வதேச விமான சேவையில் சிறந்து விளங்கும் முதன்மையான விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் செயல்படுகிறது.
இந்த விமான நிலையத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானங்களில் தொடர்ந்து பயணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 225 பயணிகள், 19 விமான ஊழியர்கள் என மொத்தம் 244 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு சில மணிநேரங்களில் ரஷிய வான்பறப்பில் பறந்துகொண்டிருந்தது.
திடீரென எதிர்பாராத விதமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த, விமானி உடனடியாக ரஷிய விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ரஷியாவின் ரஷ்னொயர்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக தரையிறக்கபட்டது.
இதையடுத்து, மாற்று விமானம் மூலம் பயணிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.