Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு
நிலநடுக்க பாதிப்பால், 12 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்கள் வெளியாக உள்ளன.
மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்க பாதிப்பால், 12 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்கள் வெளியாக உள்ளன.
மேற்கு மாகாணமான பட்கிஸ் என்ற இடத்தில் உள்ள குவாடிஸ் மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துள்ளதாக அம்மாவட்ட ஆளுநர் முகமது சலே பர்டெல் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் இல்லங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Felt #earthquake (#زلزله) M5.3 strikes 87 km S of #Ghormach (#Afghanistan) 21 min ago. Please report to: https://t.co/V1CnOW8bfJ pic.twitter.com/cOTQp4OzC1
— EMSC (@LastQuake) January 17, 2022
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது எனவும், குறிப்பாக இந்து குஷ் மலைத்தொடரில் நில நடுக்க பாதிப்பின் தாக்கம் இருப்பதாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ:
Video: according to initials reports 12 people including women and children were killed and many houses damaged in an earthquake in western province of Badghis. #Afghanistan pic.twitter.com/8iMM1fnUYn
— Alisher Shahir|علی شیر شهیر (@ashershahir) January 17, 2022
நில நடுக்கம் ஏற்பட்ட குவாடிஸ் பகுதியில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லேலும் பலர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்