3,700 அணைகளில் குறையும் நீர் சேமிப்பு.. இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. ஐ.நா கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 3,700 அணைகள் அதனுடைய மொத்த சேமிப்பில் 26% குறையும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 3,700 அணைகள் அதனுடைய மொத்த சேமிப்பில் 26% குறையும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
இது நீர்ப்பாசனம், எதிர்காலத்தில் மின் உற்பத்தி ஆகியவற்றை பாதிக்கும் எனவும் இதற்கு முக்கிய காரணம் வண்டல்களின் குவிப்பு என கூறுகின்றனர். 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 3,700 அணைகள் மொத்த சேமிப்பில் 26 சதவீதத்தை இழக்கும், இது எதிர்காலத்தில் நீர் பாதுகாப்பு, நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்தியை பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
மத்திய நீர் ஆணையம், 2015 இல், 50 ஆண்டுகளுக்கும் மேலான 141 பெரிய நீர்த்தேக்கங்கள, அதன் சேமிப்பில் 30% அதாவது அவற்றின் initial storage capcity-ல் நான்கில் ஒரு பகுதியாக குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது வண்டல் குவிப்பின் காரணமாக ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள சுமார் 50,000 பெரிய அணைகளின் ஒருங்கிணைந்த சேமிப்பு திறனில் 13 முதல் 19 சதவீதம் வரை குறைத்துள்ளது. நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் பற்றிய ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக நிறுவனம் (UNU-INWEH) நடத்திய ஆய்வின்படி, 150 நாடுகளில் உள்ள 47,403 பெரிய அணைகளில் 6,316 பில்லியன் கியூபிக் மீட்டர் சேமிப்பு கனிசமாக குறையும் என்பதைக் சுட்டிக்காட்டியது.
அதாவது 2050 ஆம் ஆண்டில் 4,665 பில்லியன் கியூபிக் மீட்டராக குறையும், இது 26 சதவீத சேமிப்பாகும். 1,650 பில்லியன் கியூபிக் மீட்டர் சேமிப்புத் திறன் என்பது, இந்தியா, சீனா, இந்தோனேசியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் ஒரு ஆண்டு நீர் பயன்பாட்டிற்குச் சமமாகும். 2022 ஆம் ஆண்டில், ஆசிய-பசிபிக் பகுதி, (உலகின் அதிக அணைகள் உள்ள பகுதி), அதன் ஆரம்ப அணை சேமிப்புத் திறனில் (initial storage capacity) 13 சதவீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நூற்றாண்டின் நடுப்பகுதியில் (2050ல்)ஆரம்ப சேமிப்புத் திறனில் கிட்டத்தட்ட கால் பகுதியை (23 சதவீதம்) இழந்திருக்கும். இப்பகுதி உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்தை கொண்டுள்ளது மேலும் நீர் மற்றும் உணவு பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கு நீர் சேமிப்பு முக்கியமானது.
UNU-INWEH மதிப்பிட்டுள்ளபடி, இந்தியாவின் 3,700 பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் ஆரம்ப மொத்த சேமிப்பில் சராசரியாக 26 சதவீதத்தை இழந்துவிடும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகின் அதிக அணைகள் உள்ள நாடான சீனா, அதன் சேமிப்பில் சுமார் 10 சதவீதத்தை ஏற்கனவே இழந்துள்ளது என்றும் 2050 ஆம் ஆண்டில் மேலும் 10 சதவீதத்தை இழக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீர் சேமிப்பு உள்கட்டமைப்பு என்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.
பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நீர்மின்சாரம், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரை வழங்க உதவுகிறது. மேலும் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுகிறது. வண்டல் குவிப்பு பல ஆண்டுகளாக நீர்த்தேக்கத்தின் கொள்ளளவைக் குறைத்து அதன் ஆயுட்காலத்தையும் பாதிக்கிறது.ஒரு அணையானது 15 மீ அல்லது 5 முதல் 15 மீ உயரம் வரை இருந்தால் பெரிய அணையாக கருதப்படுகிறது, ஆனால் அவற்றில் 3 மில்லியன் கியூபிக் மீட்டருக்கு மேல் நீர் தேக்கப்படுகிறது.