மேலும் அறிய
பண்ருட்டியில் பள்ளியில் விளையாடும்போது ஏற்பட்ட பிரச்னை.... மோதிக்கொண்ட கிராம மக்கள்...!
மாணவர்கள் மோதல் பற்றி அறிந்த வேலங்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் இரும்பு மற்றும் உருட்டு கட்டையுடன் கயப்பாக்கம் கிராமத்திற்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

பண்ருட்டி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் விளையாடும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இருபிரிவை சேர்ந்த மாணவர்களிடையே தகராறாக மாறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் மோதல் பற்றி அறிந்த வேலங்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் இரும்பு மற்றும் உருட்டு கட்டையுடன் கயப்பாக்கம் கிராமத்திற்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தாக்கினர். இரண்டு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் விசிக கொடிக்கம்பம் உடைக்கப்பட்டது. இந்த மோதலில் சிலர் காயமடைந்தனர்.
இரு தரப்பைச் சேர்ந்தவர் மோதல் குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் வேலங்காடு கயப்பாக்கம் ஆகிய இரு கிராமத்தைச் சேர்ந்த 6க்கு மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement