மேலும் அறிய

108 Ambulance: கடலூரில் ஒரே ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள் இத்தனை பேரா?

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை கடந்த ஆண்டில் 85 ஆயிரத்து 093 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை

தமிழ்நாடு அரசும் EMRI GREEN HEALTH சர்வீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமும் இணைந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இலவச 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையை வழங்கி வருகிறது, இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 54 அரசு 108 ஆம்புலன்ஸ்கள் வெவ்வேறு இடங்களில் இயங்கி அதன் சேவையை வழங்கி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 85 ஆயிரத்து 93 பேருக்கு 108 ஆம்புலன்ஸ்  மூலம் சேவை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரசவ தாய்மார்கள் 21,363,  பச்சிளம் குழந்தைகள் 851 பேரும், குழந்தைகள் 553 , சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் சுமார் 15,877 பேரும், காய்ச்சல் காரணமாக 5293 பேரும், இருதய நோய் சம்பந்தப்பட்ட மற்றும் சுவாசப் பிரத்தனை சம்பந்தப்பட்ட சுமார் 4,999 பேரும் மற்றும் இதர மருத்துவ சேவைகளுக்காக சுமார் 18,527 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் 2022 ஆம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள்  75,471 நபர்கள். இந்த ஆண்டு 85,093 இது கடந்த ஆண்டை காட்டிலும் 9622 நபர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை அதிகமாக பயன்படுத்தி உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் 45 பேசிக் லைவ் சப்போர்ட் 108 ஆம்புலன்ஸ் , 4 அதிநவீன வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ்களும்,  ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கான அதிநவீன வசதிகளும் கூடிய 108 ஆம்புலன்ஸும் , 1 பைக் ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் பிரசவ தாய்மார்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் 

அவசர பாதிப்பு/ உதவியாளர் 108/102 என்ற எண்ணுக்கு அழைக்கவும். அவசரகால பதிலளிப்பு அதிகாரியின் திரையானது அவசரநிலையை எளிதாக்குவதற்கும் நோக்குவதற்கும் உதவுகிறது, மூலோபாயமாக அமைந்துள்ள ஆம்புலன்ஸை (ஆம்புலன்ஸ்/ போலீஸ்/ தீயணைப்பு) ஒதுக்க உதவுகிறது.

அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (EMT) நோயாளி/பாதிக்கப்பட்டவர்களை நிலைப்படுத்துவதற்காக பொருத்தமான மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, ​​உணர்ச்சிவசப்பட்ட முன்-மருத்துவமனை கவனிப்பை வழங்குவார். அவசரநிலைப் பதில் மைய மருத்துவர் (ERCP) நோயாளியின் பராமரிப்புக்கு ERO, EMT ஆகியவற்றின் ஆதரவுடன், உகந்த முன் மருத்துவமனைப் பராமரிப்பை உறுதி செய்ய அறிவுறுத்துகிறார்.

13 மாநிலங்களுடன் (ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத், கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், கேரளா, டெல்லி & யூனியன் பிரதேசம் (டாமன் & டையூ, தாத்ரா & நகர் ஹவேலி) 7937- 108 உடன் இணைந்து செயல்படுகிறது. 54,000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட EMS ஆம்புலன்ஸ்கள். EMRI Green Health Services, GVK EMRI ஆனது, 28 ஜூலை, 2016 அன்று PPP முறையில் இலங்கையில் பயிற்சி, துவக்க மற்றும் செயல்பாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியது. இந்த திட்டம் GoI ஆல் ஆதரிக்கப்படுகிறது. 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 840 மில்லியன் மக்கள் உள்ளனர் (கிராமப்புறம், மலைப்பாங்கான மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பு அதிகரித்து வருகிறது).

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை,  தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை, தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : தலைமை தாங்கும் செங்கோட்டையன்?தனித்து விடப்பட்ட எடப்பாடி!பின்னணியில் பாஜக?Rajiv Gandhi : தூக்கியடிக்கப்பட்ட எழிலன் ராஜிவ் காந்திக்கு ஜாக்பாட் சாட்டையை சுழற்றும் UdhayanidhiED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTR

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை,  தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை, தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
Embed widget