![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சிகரெட்டில் இருந்து படுக்கையில் பரவிய தீ.. புகை மூண்டதால் மூச்சுத்திணறி இளைஞர் உயிரிழப்பு..
காட்பாடி அடுத்த வி.ஜி.ராவ் நகர் பகுதியில் சிகரெட்டில் இருந்து தீ படுக்கையில் பிடித்து ஏற்பட்ட புகை மூட்டத்தால் வாலிபர் உயிரிழப்பு. காட்பாடி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்
![சிகரெட்டில் இருந்து படுக்கையில் பரவிய தீ.. புகை மூண்டதால் மூச்சுத்திணறி இளைஞர் உயிரிழப்பு.. vellore young man died due to suffocation when a cigarette caught fire in his bed சிகரெட்டில் இருந்து படுக்கையில் பரவிய தீ.. புகை மூண்டதால் மூச்சுத்திணறி இளைஞர் உயிரிழப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/1b7a6583ba76df1ff6f13f5182345ab0_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வி.ஜி.ராவ் நகர் சி.செக்டார் பகுதியை சேர்ந்த கிளமெண்ட்- ஜாக்லின் இந்த தம்பதியிரின் மகன் டெரன்ஸி ஜோயல் வயது (22) இவர் படித்து வருவதாகவும் அப்பகுதியில் இவர் குடித்துவிட்டும் மற்றும் புகை பழக்கமும் அதிகளவில் உள்ளதாகவும் அப்பகுதியில் கூறுகின்றனர். டெரன்ஸி ஜோயலின் தந்தை கிளமெண்ட் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டெரன்ஸி ஜோயலின் தாயார் ஜாக்லின் தற்போது துபாயில் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் டெரன்ஸி ஜோயல்(22) காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள அவரது சொந்த வீட்டின் மேல் தளத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.நிலையில் நேற்று இரவு அவரது வீட்டில் திடீரென கடும் புகைமூட்டம் மற்றும் உள்ளே ஏதோ எரிவது போன்று வெளிச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ள பொது மக்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்புதுறையினரிடம் தகவல் அளித்துள்ளனர் .பின்னர் காட்பாடி காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர்.
அதன் பிறகு மேல் மாடியில் உள்ள டெரன்ஸி ஜோயல் தங்கியுள்ள வீட்டின் கதவை உடைத்துள்ளனர். உள்ளே சென்ற தீயணைப்பு துறையினர் பார்த்தபோது டெரன்ஸி ஜோயல் அவரது அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அதன் பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் இவர் புகை மூட்டத்தின் காரணமாக டெரன்ஸி ஜோயல் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல்துறையினர் டெரன்ஸி ஜோயல்
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டுடன். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த டெரன்ஸி ஜோயலுக்கு மது மற்றும் புகை பழக்கம் இருந்ததாகவும், இவர் நேற்று இரவு அதிகமான மதுபோதையில் வீட்டிற்கு வந்தார் எனவும், அப்போது அவர் வீட்டின் படுக்க அறையில் சிகரெட்டை பற்றவைத்து பிடித்து இருந்துள்ளார். அப்போது சிகரெட்டை அனைக்காமல் தூங்கியிருக்காலம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக சிகரெட்டில் இருந்த தீ படுக்கையில் பட்டு தீ சிறிது சிறிதாக பற்றி அதன் மூலம் புகை உண்டாகி இருக்கலாம். இந்த புகை வெளியில் வந்தும், இவர் போதையில் இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)