திருவண்ணாமலை : இன்றும், இம்மாதம் 18-ஆம் தேதியும் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் பட்டியல்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும், 18-ஆம் தேதியும் சந்தவாசல், சேத்துப்பட்டு,தேவிகாபுரம் பகுதிகள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த கனமழையால் மாவட்டங்களில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளதால். மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்;
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் மற்றும் சமுத்திரம் துணை மின் நிலைய பகுதியில் பராமரிப்பு காரணமாக இன்று 15-ஆம் தேதி காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர் ,எடப்பாளையம், கீழ்நாத்தூர் ,வேல் நகர், கோபால் நாயக்கன் தெரு, கரிகாலன் தெரு ,பைபாஸ் சாலை, வேட்டவலம் ரோடு, சிறுபாக்கம், மேல் செட்டிபட்டு, அத்தியந்தல், கட்சிராப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, காந்திபுரம், தெண்மாத்தூர், தச்சம்பட்டு, வெளியூர், வரகூர் , சாந்திமலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆசிரமம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழன் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை சந்தவாசல் பகுதியில் மின் நிறுத்தம்
ஆரணியை அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பணிகள் காரணமாக நாளை 16-ஆம் தேதி (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சந்தவாசல், கல்வாசல் ஏரிக்குப்பம் ,பாளையம், நடுக்குப்பம் ,படவேடு ,கஸ்தம்பாடி ,வடமாதிமங்கலம் விலாங்கு ப்பம் மருத்துவம்பாடி ,அத்தி மலைப்பட்டு ,அம்மாபாளையம், ஒண்ணுபுரம் ,பாரியூர், ராமநாதபுரம், அனந்தபுரம், கொளத்தூர் ,மேல் நகர், கண்ணமங்கலம் ,வண்ணாங்குளம் ,காளசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். ரவி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று சேத்துப்பட்டு , தேவிகாபுரம் பகுதியில் 18-ஆம் தேதி மின் நிறுத்தம்..
சேத்துப்பட்டு மற்றும் தேவிகாபுரம் ,அப்போது, தச்சம்பாடி, ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 18-ஆம் தேதி ( சனிக்கிழமை) நடைப்பெற்ற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை சேத்துப்பட்டு, நெடுங்குணம் , தேவிகாபுரம், மேல்வில்லிவலம், நந்தியம்பாடி, மருத்துவம்பாடி , தத்தனூர், வேப்பம்பட்டு, செங்கை சூடாமணி ,கோணமங்கலம், நம்மேடு, அப்பேடு, கரிப்பூர், முடையூர், தும்பூர், ஒத்தலவாடி, பத்தியாவரம் ,நரசிங்கபுரம், ராஜபுரம், கொத்தந்தவாடி, இடையன் கொளத்தூர், மேடிப்பட்டு, கிழக்குமேடு, ஆத்தூரை, தேவி மங்கலம், ஊத்தூர் ஆகிய ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவல்களை சேத்துப்பட்டு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயச்சந்திர பாபு தெரிவித்தார்